தென்மேற்கு சீன நகராட்சியான சோங்கிங்கின் சில பகுதிகளில் கனமழையின் காரணமாக வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. சீனாவில் பெய்து வரும் கனமழையால் பல்வேறு மாகாணங்களில் பெரும் வெள்ளச்சேதம் ஏற்படுள்ளது. இதில் சோங்கிங்கின் சில பகுதிகளில் கட்டிடங்கள்,சாலைகள் மற்றும் மரங்கள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளன. சுமார் 280 வீடுகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 490 மேற்பட்டோர் வீட்டுக்குள் கழுத்தளவு நீரில் மூழ்கியுள்ளதால் அவர்களை மீட்பு குழுவினர் பத்திரமாக மீட்டு வருகின்றனர். இந்நிலையில் சோங்கிங்கில் கனமழையால் இறந்தவர்களின் எண்ணிக்கை ஐந்தாக உயர்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.