ஒரு ஆண்டு என்பது வெறும் 12 மாதங்கள், 365 நாட்களோ, 52 வாரங்களோ அல்ல... அது நமது அன்பார்ந்தவர்களோடு இணைந்து வாழ்ந்த நாட்களை நினைவு படுத்தும் பல மறக்க முடியாத நிமிடங்கள், நொடிகள் நிறைந்தது. பல புது உறவுகள் நம் வாழ்க்கையில் வந்திருக்கும், அதே போல, பல அழகான உறவுகள் முடிந்திருக்கும். ஆனால், கண்ணீர் தர வகையில் இருந்தாலும் சரி புன்னகை அளிப்பதாக இருந்தாலும் சரி, ஆண்டு முடியும் போது மனதில் ஒரு அழகான நினைவு பெட்டகத்தை எடுத்து செல்லும் ஒரு நாளாக தான் இந்நாள் இருக்கிறது.
இந்நிலையில், பலர் இந்த நாளில், தங்களுக்கு பிடித்தவர்களுக்கு பரிசுகள் கொடுப்பது வழக்கம். அந்த வகையில், தனது வாடிக்கையாளர்களுக்கு, கூகுள் நிறுவனம் பொதுவாக கூகுள் டூடுலையே பரிசாக கொடுப்பது வழக்கம். அப்படி இந்த ஆண்டின் இறுதிக்கு கூகுள் டூடுலில், இந்த ஆண்டின் ஒரு ஃப்ளாஷ்பேக் பெட்டகமாக உருவாக்கி, ரசிகர்களுக்கு ஒரு பெரிய ரீலை வெளியிட்டு, மக்களுக்கு நெகிழ்ச்சி கொடுத்துள்ளது.
கூள் லோகோவை தொட்டதுமே, கன்ஃபெட்டிகள், அதாவது வண்ண காகிதங்களைப் பறக்க விட்டு கொண்டாட்டத்தைத் துவங்கி வைக்கிறது கூகுள். இந்த பக்கத்தில், “செயிண்ட் தினம்” கொண்டாட்டத்தோடு, ஆண்டின் இறுதிக்கான கொண்டாட்டம் குறித்த தகவல்களும் வெளியிடப்பட்டுள்ளன.
பொதுவாகவே பிரபலங்களின் பிறந்தநாட்களுக்கும், சிறப்பு நாட்களுக்காகவும் டூடுலை வெளியிடும் கூகுலின் இந்த டூடுள் பலராலும் வரவேற்கப்பட்டு வருகிறது.