வெப்பத்தை எதிர்கொள்ளும் ஜப்பானியர்கள்

வெப்பத்தை எதிர்கொள்ளும் ஜப்பானியர்கள்

ஜப்பானில் வழக்கத்திற்கு மாறாக அதிக வெப்பநிலை நிலவுவதால் அந்நாட்டு அரசு பொதுமக்களை காக்கும் விதத்தில் பல்வேறு முன்னேற்படுகளை செய்துள்ளது. அந்நாட்டில் உள்ள 26 மாவட்டங்களில் பகலில் 40 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாகி வருவதால் பொதுமக்களுக்கு வெப்ப பக்க வாதம் ஏற்படாலாம் என்று சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது. இதனையடுத்து பிரபலமான சுற்றுலாத் தலமான டோக்கியோ டவர் உட்பட, தலைநகரைச் சுற்றி புதிய, குளிரூட்டிகள் பொருத்தப்பட்ட நூலகங்கள், தங்குமிடங்கள்,பொது இடங்களில் தண்ணீர் பீய்ச்சி அடிக்கும் அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் வெப்பப் பக்கவாதத்தால் பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com