பயங்கர காட்டுத் தீ; 800 ஏக்கா் காடுகள் சேதம்

மரிபோசா கவுண்டியில் உள்ள பொதுமக்கள் வேறு பகுதிக்கு மாற்றப்பட்டு அவர்கள் பாதுகாப்பாக தங்குவதற்கு முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
பயங்கர காட்டுத் தீ; 800 ஏக்கா் காடுகள் சேதம்

அமெரிக்கா நாட்டின் கலிபோர்னியாவில் உள்ள மரிபோசாவில் காட்டுத்தீ காரணமாக 800 ஏக்கருக்கு மேல் காடுகள் எரிந்து சேதமடைந்தன. கலிபோர்னியாவில் கடுமையான வெப்ப அலையானது வாட்டி வதைத்த நிலையில் வறண்ட சூழல் மற்றும் பலத்த காற்றால் திடீரென காட்டுத்தீ ஏற்பட்டது. இந்நிலையில் தீயை அணைப்பதில் தீயணைப்பு வீரர்கள் கடுமையாக போராடி வருகின்றனர். இதன் காரணமாக மரிபோசா கவுண்டியில் உள்ள பொதுமக்கள் வேறு பகுதிக்கு மாற்றப்பட்டு அவர்கள் பாதுகாப்பாக தங்குவதற்கு முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com