கிளிமஞ்சாரோ மலை ஏறுவதற்கு, தான்சானியா பறந்த முத்தமிழ் செல்வி!!

கிளிமஞ்சாரோ மலை ஏறுவதற்கு, தான்சானியா பறந்த முத்தமிழ் செல்வி!!

7 கண்டங்களில் உள்ள உயரமான மலைகளை ஏறி சாதனை படைக்க வேண்டும் என்பதே இலக்கு என்று தமிழ்நாட்டைச் சேர்ந்த மலையேற்ற வீராங்கனை முத்தமிழ் செல்வி கூறியுள்ளார்.

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ள ஜோகில்பட்டியைச் சேர்ந்தவர் முத்தமிழ் செல்வி (33).  தற்போது கணவர் மற்றும் இரு மகள்களுடன் சென்னையில் வசித்து வருகிறார். இவர் தனியார் பள்ளியில் ஆசிரியையாகவும், ஜப்பானிய மொழி பெயர்ப்பாளராகவும் பணியாற்றி வருகிறார். முத்தமிழ்செல்வி கடந்த மே மாதம் 22ந் தேதி எவரெஸ்ட் சிகரத்தைத் தொட்டு சாதனை படைத்தார். ஜுலை மாதம் 21ந் தேதி யூரோப்பில் உள்ள மலையை ஏறி உள்ளார். இவருக்கு தமிழ்நாடு அரசு கல்பனா சாவ்லா விருது வழங்கி உள்ளது.  தற்போது 3வதாக ஆப்பிரிக்க  தான்சானியாவில் உள்ள கிளிமஞ்சாரோ மலை ஏற உள்ளார். 

இதற்காக மும்பை வழியாக தான்சானியா செல்ல சென்னை விமான நிலையம் வந்த முத்தமிழ் செல்வியை காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் படப்பை மனோகரன் உள்பட பலர் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்து வழியனுப்பி வைத்தனர்.

அப்பொழுது முத்தமிழ்ச் செல்வி பேசுகையில், "7 கண்டத்தில் உள்ள உயரமான மலைகளை ஏறி சாதனை படைக்க வேண்டும் என்பது இலக்கு.  கிளிமஞ்சாரோ மலை ஏறவதற்காக செல்கிறேன். தமிழ்நாடு அரசு உதவியுடன் பலர் உதவி செய்து வருகின்றனர். அடுத்த மாதம் ஆஸ்திரேலியா செல்கிறேன். 2024ம் ஆண்டு ஜுலைக்குள் 7 கண்டங்களில் உள்ள உயரமான மலைகளை ஏறி சாதனை படைப்பேன். கிளிமஞ்சாரோ மலையில் மைன்ஸ் 10 டிகிரியாக இருக்கும். குடும்பத்தினர் ஊக்கம் காரணமாக மலை ஏறுவதற்கு உதவியாக இருக்கிறது" எனக் கூறியிருக்கிறார்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com