இதுவரை கண்டிராத வகையில் தலைமுடியை நிஜமான டீ பாத்திரமாக வடிவமைத்து அசத்தியிருக்கிறார் ஈரான் சிகை அலங்கார நிபுணர் சயிதே அரியாய். முதலில் டீ பாத்திர வடிவில் சிறு கம்பிகளை வளைத்து தலையில் வைக்கிறார். அதைச் சுற்றி தலைமுடியை சேர்த்து வைத்து ஒட்டி, இறுக்கம் தேவையான இடத்துக்கு ஜடை பின்னி கட்டி டீ பாத்திரமாக மாற்றுகிறார். இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் 36 லட்சம் பார்வையாளர்களை கடந்துள்ளது