ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கும் விவகாரம்.. நாட்டின் எரிசக்தி தேவையைப் பொறுத்தே முடிவு - மத்திய அரசு

நாட்டின் எரிசக்தி தேவையை பொறுத்தே ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியாவின் முடிவு அமைகிறது என மத்திய அரசு பதிலளித்துள்ளது.
ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கும் விவகாரம்.. நாட்டின் எரிசக்தி தேவையைப் பொறுத்தே முடிவு - மத்திய அரசு

உக்ரைன் ரஷ்யா போர் 3 மாதங்களுக்கும் மேலாக நடைபெற்று வரும் நிலையில், ரஷ்யாவிடம் இருந்து தள்ளுபடி விலையில், இந்தியா கச்சா எண்ணெய் வாங்கி வருகிறது.

இதற்கு அமெரிக்காவும் இதர மேலை நாடுகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதுதொடர்பாக கடந்த ஏப்ரல் மாதம் மேலைநாட்டுத் தலைவர்கள் பலர் அடுத்தடுத்து இந்தியாவுக்கு வந்து தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.

இந்நிலையில் பல்வேறு நாடுகளும் பிராந்தியங்களும் கூட எரிசக்தி தேவையை கருத்தில் கொண்டு ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை மத்திய அரசு சுட்டிக்காட்டியுள்ளது. ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவிடம் வாங்கும் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு, இந்தியா வாங்குவதை விட அதிகம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com