காவல்துறை சார்பில் திருநங்கைகளுக்கு ஆலோசனை!!

காவல்துறை சார்பில் திருநங்கைகளுக்கு ஆலோசனை!!
Published on
Updated on
1 min read

சென்னை புழலில், மாதவரம் மற்றும் புழல் சுற்றுவட்டார பகுதிகளில் இரவு நேரங்களில் சாலைகளில் பாலியில் தொழில் ஈடுபடும் திருநங்கைகளை அழைத்து, காவல்துறை சார்பில்  புழல் சரக உதவி ஆணையாளர் அறிவுரை வழங்கியுள்ளார்.

சென்னை புழலில், மாதவரம் மற்றும் புழல் சுற்றுவட்டார பகுதிகளில் இரவு நேரங்களில் சாலைகளில் பாலியில் தொழில் ஈடுபடும் திருநங்கைகள் வரவழைக்கப்பட்டு, அவர்களுக்கு காவல்துறை சார்பில் புழல் சரக உதவி ஆணையாளர் ஆதிமூலம் அறிவுரை வழங்கியுள்ளார்.

திருநங்கைகளுக்கு பாலியல்  காரணமாக ஏற்படும் தீங்குகள் மற்றும்  பின் விளைவுகளை குறித்து பல்வேறு அறிவுரைகளை வழங்கி நடந்த உண்மை குற்ற சம்பவங்களை உதாரணமாக எடுத்துரைத்து, இரவு நேரங்களில் திருநங்கைகள் பாலியல் தொழிலில் ஈடுபடாமல் அதனை தவிர்த்து வேறு ஏதேனும் தொழில் கற்றுக் கொண்டு அதில் முன்னேற வேண்டும் எனவும்  அதற்கு வங்கிகள் கடன்தர தயாராக உள்ளதாகவும் அறிவுரை வழங்கியுள்ளார்.

மேலும், குற்ற சம்பவங்கள் நடைபெறும் இடங்களில் உள்ள கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை ஆய்வு செய்யும் போது, அதில்  திருநங்கைகள் பதிவில் இருப்பதால் அவர்களையும் விசாரணை வலையத்திற்குள் கொண்டுவர வேண்டிய சூழல் காவல்துறைக்கு ஏற்படுவதால் இத்தகைய சூழ்நிலையில் இந்த வகையான தொழிலை தவிர்த்து விட்டு வேறு ஏதேனும் தொழிலில் ஈடுபட்டு முன்னேற்றம் அடைய வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.

மேலும் சுய தொழில் மற்றும் வேறு தொழில்கள் தொடங்க அல்லது மாற்று வழியில் செல்ல ஏதேனும் உதவிகள் தேவைப்பட்டால் எங்களிடம்  ஆலோசனை பெற்று, அதற்குரிய அதிகாரிகளிடம்  நாங்கள் பேசி தீர்வுக்கான  வழிவகைகளை செய்து தருவோம் என திருநங்கைகளிடம் உறுதி அளித்துள்ளார்.

இந்த நிகழ்வில் மாதவரம் மற்றும் புழல் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திருநங்கைகள் திரளாக கலந்து கொண்டனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com