“பள்ளிகளில் தொடரும் வன்முறை சம்பவங்கள்..” வயித்தில் ரத்தம் சொட்ட வந்த சிறுவன்..! பள்ளி வளாகத்தினுள்ளே… வெறிச்செயலில் ஈடுபட்ட 8 -ஆம் வகுப்பு மாணவன்!!

கடந்த செவ்வாய்க்கிழமை, பள்ளி மணி அடித்தவுடன் வீட்டிற்கு திரும்புவதற்காக நயன் தனது பையை எடுத்துக்கொண்டு ...
10th student stabbed to death
10th student stabbed to death
Published on
Updated on
2 min read

இந்தியாவில், இளைஞர்களில் கொலைக்குற்றங்களில் ஈடுபடுவது அதிகரித்துள்ளது. சமூகம் நாளுக்கு நாள் வன்முறைகளால் மலிந்து வருகிறது. அதிலும் இளைஞர்கள் மிகவும் ‘Impulsive’ -ஆன உளவியலை கொண்டுள்ளனர் என்றே சொல்ல வேண்டும். இந்த உளவியல் சிக்கலில் பெரும்பாலான நேரங்களில் பள்ளி  மாணவர்கள்தான் போய் மாட்டிக்கொள்கின்றனர்.  சமீபத்தில் இந்தியா முழுக்க இளைஞர்கள் அதிக அளவிலான வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர். சில தினங்களுக்கு முன்னர்தான் புனேவில் ஒரு சிறுவன் 3 பேரால் குத்திக் கொல்லப்பட்டார். இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள், கொல்லப்பட்டவர் அனைவருமே 18 கீழே உள்ள சிறுவர்கள்தான். இந்த சோகம் ஆறுவதற்குள்ளாகவே  அகமதாபாத் பகுதியில் மீண்டும் ஒரு பள்ளி மாணவன் குத்திக் கொல்லப்பட்டுள்ளார்.

அகமதாபாத்தில் உள்ள ஒரு பள்ளியில் வளாகத்தினுள் வைத்தே 10 -ஆம் வகுப்பு படிக்கும் மாணவனை 8 -ஆம் வகுப்பு மாணவன் கத்தியால் குத்திக்கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த சம்பவத்தால் ஆத்திரமடைந்த பெற்றோர் மற்றும் பொதுமக்கள் பள்ளிக்கு வெளியே பெரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது. 

குஜராத் மாநிலத்தின் அகமதாபாத் அகமதாபாத்தின் கோக்ராவில் உள்ள செவன்த்-டே அட்வென்டிஸ்ட் மேல்நிலைப்பள்ளியில் 10 -ஆம் வகுப்பு படித்து வந்தார் நயன் என்ற மாணவர். இவருக்கும் இவருடைய ஜூனியர் மாணவர்களுக்கும் எதோ சிறு தகராறு இருந்ததாக தெரிகிறது. இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை மதியம், பள்ளி மணி அடித்தவுடன்  வீட்டிற்கு திரும்புவதற்காக நயன் தனது பையை எடுத்துக்கொண்டு வெளியில் வந்துள்ளார். பள்ளி வராண்டாவில் அவர் வந்துகொண்டிருந்தபோது, அவரை வழிமறித்த 8 -ஆம் வகுப்பு மாணவர்கள் சிலர் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். சீக்கிரமே இந்த மாணவர்களுக்குள் கைகலப்பு ஏற்பட்டுள்ளது, இந்நிலையில் அந்த கேங்கில் இருந்த சிறுவன், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் நயன் வயிற்றில் குத்திவிட்டு, அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.

சிசிடிவி காட்சிகளில், நயன் தனது வயிற்றில் கையை வைத்துக்கொண்டு, காயத்தை மூடிக்கொண்டு பள்ளிக்குள் நடந்து செல்வதை பார்க்க முடிகிறது. உடனே அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர் இருப்பினும் அவர், சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்து விட்டார். 

இதற்கிடையில் நயனை தாக்கிய மாணவன் பலியின் பின்புறம் உள்ள கட்டிடத்தில் சென்று ஒளிந்துகொண்டுள்ளார். ஆனால் பள்ளியின்  பராமரிப்பாளர் இதுகுறித்து உடனடியாக போலீசுக்கு தகவல் அளித்துவிட்டார். அதன் பேரில் சம்பவ இடத்திற்க்கு வந்த போலீசார், மாணவனை கைது செய்து கொலை முயற்சி வழக்கு பதிவு செய்துகொண்டனர். மேலும் CCTV -காட்சிகளை கைப்பற்றி மேலும், சம்பவத்தின் போது இருந்த மற்ற மாணவர்களின் வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளனர்.

மேலும் மருத்துவமனையில் இருந்த மாணவர் உயிரிழந்த நிலையில், பள்ளியின் முன் பெரும் கூட்டம் கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.  

அம்மாநில கல்வி அமைச்சர் பிரபுல்பாய் பன்சேரியா பேசுகையில்  “நயனின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்தார், மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட பெற்றோர்கள் அமைதியைக் காக்க வேண்டும் என்றும் விரைவில்  நீதி நிலைநாட்டப்படும்” எனவும் தெரிவித்துள்ளனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com