மேற்குவங்க தேர்தல் வன்முறையில் 18 பேர் உயிரிழப்பு...!மறு வாக்குப்பதிவு செய்ய கோரிக்கை!!

மேற்குவங்க தேர்தல் வன்முறையில் 18 பேர் உயிரிழப்பு...!மறு வாக்குப்பதிவு செய்ய கோரிக்கை!!
Published on
Updated on
1 min read

மேற்கு வங்காளத்தில் ஏற்பட்ட தோ்தல் வன்முறையில் போலீஸ் வாகனத்திற்கு தீவைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


மேற்கு வங்கத்தில் பஞ்சாயத்து தேர்தலுக்கான வாக்குப்பதிவின் போது அரசியல் கட்சிகளிடையே ஏற்பட்ட வன்முறையில் 18 போ் சுட்டுக் கொல்லப்பட்டனா். இதற்கிடையே கலவரம் கட்டுப்படுத்தப்பட்ட நிலையில், வன்முறையில் ஈடுபட்ட சிலா் அங்கு நிறுத்தப்பட்டிருந்த போலீஸ் வாகனத்திற்கு தீ வைத்தனா். இதில் வாகனம் முழுவதும் தீயில் கருகி சேதமடைந்தது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

இதுகுறித்து தகவலறிந்த அம்மாநில ஆளுநா் சிவி ஆனந்த் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வன்முறையில் காயமடைந்தவர்களைச் சந்தித்து ஆறுதல் கூறினார். தொடா்ந்து அவா் செய்தியாளா்களை சந்தித்து பேசுகையில், இந்த சம்பவம் மிகவும் கவலை அளிப்பதாகவும், கலவரத்தில் கொல்லப்படுவதும் ஏழைகள்தான், கொலையாளிகளும் ஏழைகள்தான் என தொிவித்தாா். மேலும் நாம் வறுமையைக் கொல்ல வேண்டுமே தவிர ஏழைகளை அல்ல என குறிப்பிட்டாா்.

இந்நிலையில் இந்த வன்முறை சம்பவம் குறித்து அம்மாநில தேர்தல் ஆணையாிடம் புகாா் மனு அளிப்பதற்காக சுவேந்து அதிகாாி தலைமையில் ஏராளமான  பாஜகவினா் அலுவலகத்திற்கு வந்தனா். அப்போது அவா்களை அலுவலகத்திற்குள் நுழைய விடாமல் அதிகாாிகள் கதவை பூட்டினா். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தொடா்ந்து மாநில தேர்தல் ஆணையரை சந்திக்க அனுமதியளிக்கப்பட்டது.

பின்னா் சுவேந்து அதிகாாி, செய்தியாளா்களை சந்தித்து பேசுகையில், வன்முறை மற்றும் சிசிடிவி செயல்படாத பகுதிகளில் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து மறு வாக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று தோ்தல் ஆணையாிடம் கோாிக்கை வைத்துள்ளதாக தொிவித்தாா்.

பாஜக எம்எல்ஏ அக்னி மித்ரபால் செய்தியாளா்களை சந்தித்து பேசுகையில், வாக்கு சாவடிகளில் சிசிடிவி கேமராக்கள் இல்லை எனவும், மாநில போலீசாரும் இல்லை எனவும் குற்றம் சாட்டினாா். மேலும் சம்பவம் தொடர்பாக மாநில தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியிருப்பதாக தொிவித்தாா். 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com