மேற்கு வங்கத்தில் ஏற்பட்ட சாலை விபத்தில் 18 பேர் சம்பவ இடத்திலே உயிரிழப்பு

மேற்கு வங்க மாநிலம் நாடியாவில் வாகன விபத்தில் உயிரிழந்த 18 பேர் குடும்பத்திற்கு அம்மாநில ஆளுநர் இரங்கல் தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்கத்தில் ஏற்பட்ட சாலை விபத்தில் 18 பேர் சம்பவ இடத்திலே உயிரிழப்பு
Published on
Updated on
1 min read

நாடியாவில் இன்று அதிகாலை, சடலத்துடன் சுமார் 20 பேர் சென்ற வாகனம் ஒன்று நவத்விப் பகுதி அருகே, சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் வாகனத்தில் பயணித்த 18 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 5 பேர் படுகாயமடைந்தனர். இந்த கோர விபத்துக்கு கடும் மூடு பனி நிலவியதே காரணம் என சொல்லப்படுகிறது. இந்தநிலையில் விபத்தில் உறவினர்களை இழந்த குடும்பத்திற்கு அம்மாநில ஆளுநர் ஜக்தீப் தங்கர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com