மத்தியபிரதேசம்: செஹோர் மாவட்டத்தில், 300 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்து மாட்டிக்கொண்ட இரண்டரை வயது குழந்தை
மத்தியபிரதேசத்தின் செஹோர் மாவட்டத்தில் உள்ள முங்காலி கிராமத்தில், இரண்டரை வயது பெண் குழந்தை ஆழ்துளை கிணற்றில் விழுந்துள்ளார்.
நேற்று மதியம், குழந்தை வயலில் விளையாடிக் கொண்டிருந்துள்ளாள். அப்போது எதிர்பாராத விதமாக அருகிலிருந்த ஆழ்துளை கிணறில் விழுந்துள்ளாள். இதையறிந்த மக்கள், தீயணைப்பு துறைக்கும், தேசிய பேரிடர் மீட்பு குழுவினருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு குழுவினர், குழந்தையை மீட்கும் பணியை ஆரம்பித்தனர். குழந்தையை, மேலிருந்து அதிகாரிகள் கண்காணித்துக் கொண்டும், குழந்தைக்கு தேவையான மூச்சுக்காற்றும் கொடுத்து வருகின்றனர்.
ஆழ்துளை கிணற்றின் பக்கவாட்டில், ஜே.சி.பி இயந்திரங்கள் மூலம் தோண்டி, குழந்தையை மீட்கும் பணியில் உள்ளனர் மீட்பு குழுவினர். தற்போதைய தகவல் படி குழந்தை 300 அடி ஆழத்தில் உள்ளது.
குழந்தையை மீட்கும் பணி வேகமாக நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.