" ஜூன் 25ஆம் தேதியை மறந்து விடக்கூடாது ; இந்திய வரலாற்றில் ஒரு கருப்பு அத்தியாயம் " - பிரதமர் நரேந்திர மோடி.

" ஜூன் 25ஆம் தேதியை மறந்து விடக்கூடாது ;  இந்திய வரலாற்றில் ஒரு கருப்பு அத்தியாயம் " -  பிரதமர் நரேந்திர மோடி.
Published on
Updated on
1 min read

ஜூன் 25ஆம் தேதியை மறந்து விடக்கூடாது எனவும் இது இந்திய வரலாற்றில் ஒரு கருப்பு அத்தியாயம் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். 

மனதின் குரல் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி,நமது அரசமைப்புச் சட்டத்தை தலையாயது என கருதுகிறோம் என்பதால் நாம் ஜூன்  25ஆம் தேதியை மறந்து விடக்கூடாது என்றார்.  இந்த நாளன்று தான் நமது தேசத்தில் அவசரநிலை பிறப்பிக்கப்பட்டதாக குறிப்பிட்டார்.

இது இந்திய நாட்டு வரலாற்றிலேயே ஒரு கருப்பு அத்தியாயம் எனவும் லட்சக்கணக்கானோர் இந்த அவசரநிலையைத் தங்கள் முழுச்சக்தியோடு எதிர்த்தார்கள் என கூறினார். 

மேலும் மக்களாட்சியின் ஆதரவாளர்களின் மீது இந்தக் காலகட்டத்தில் எந்த அளவுக்குக் கொடுமைகளும், எத்தனை துன்பங்களுக்கு அவர்கள் ஆளானார்கள் என்பதை நினைக்கும் போது இன்றும் கூட மனம் கொந்தளிக்கிறது என மனவேதனையுடன் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவா்,  2025 ஆம் ஆண்டுக்குள் காச நோய் முற்றிலும் ஒழிக்கப்படும் என பிரதமர் மோடி உறுதி அளித்தார்.காசநோய்க்கு எதிராக

நி-ஷய மித்ரா என்ற திட்டம் செயல்படுகிறது எனவும்  கிராமப்புறங்களில் காசநோய் பாதித்த நோயாளிகள் ஆயிரக்கணக்கானோர் தத்தெடுத்து உள்ளதே இந்தியாவின் உண்மையான வலிமை எனவும் மோடி கூறினார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com