
தமிழகத்தின் 2026 ஆம் ஆண்டு தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில் அனைத்து கட்சியினரும் தங்களது வாக்குகளை சேகரிக்க தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய்யும் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் இன்று மூன்றாவது கட்டமாக நாமக்கல் மற்றும் கரூரில் பிரச்சாரம் மேற்கொண்ட நிலையில் கரூரில் விஜய்யின் பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி மூன்று குழந்தைகள் 16 பெண்கள் உட்பட 34 பேர் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கூட்டத்தில் மயங்கி விழுந்து 45 க்கும் மேற்பட்டோர் கரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் அனைத்து கட்சியினரும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.