லாரி மீது மோதி தீப்பிடித்து கார் எரிந்ததால் 4 பேர் காயம்...

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், லாரி மீது கார் மோதி தீபிடித்து எரிந்த விபத்தில் 4 பேர் படுகாயமடைந்தனர்.
லாரி மீது மோதி தீப்பிடித்து கார் எரிந்ததால் 4 பேர் காயம்...
Published on
Updated on
1 min read

கேரளா | திருவனந்தபுரம் பகுதியைச் சேர்ந்த சோமாசிக்காரன் மகன் நிக்கில் வயது 37 என்பவர் சென்னையில் உள்ள பவன் சைபர் டெக் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
இவர் தனது மனைவி காவியா வயது 27 , இரண்டு மகள்கள் சிவா கங்கா வயது 3, சிவா ஆன்மிக்கா  வயது 1, என குடும்பத்துடன் கேரளாவில் இருந்து சென்னைக்கு காரில் சென்றனர்.

அப்போது சற்று முன் 11 : 30 மணியளவில்  கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே சேக்குஷன்பேட்டை பேருந்து நிலையம் எதிரே தேசிய நெடுஞ்சாலையில் இவர்கள் வந்து கொண்டிருந்த காரானது அதே திசையில் முன்னாள் சென்று கொண்டிருந்த டெய்லர் லாரி பின்னால் மோதி விபத்து ஏற்பட்டதில் சம்பவ இடத்திலேயே கார் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது.

அப்போது காரில் சிக்கிக் கொண்டு கத்தியபோது  அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் ஓடிவந்து காரில் இருந்து இரண்டு குழந்தைகள் உட்பட நான்கு பேரையும் காப்பாற்றி 108 ஆம்புலன்ஸ் மூலம் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் கொண்டு சென்று தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பின்னர் உளுந்தூர்பேட்டை தீயணைப்பு நிலையத்திற்கு வழியாக சென்றது வாகன ஓட்டிகள் தகவல் தெரிவித்தனர். விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் எரிந்து கொண்டிருந்த காரை தண்ணீர் பீச்சு எடுத்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தில் கார் முற்றிலும் எரிந்து எலும்புக்கூடானது.

காரில் பயணம் செய்த அனைவருக்கும் தீக்காயம் ஏற்பட்டு உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து தொடர்பாக இடைக்கல்ப போலீசார் இரு வாகனங்களில் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கார் எரிந்ததை பார்த்த பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பெரும் அச்சத்தில் சென்றனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com