56 வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்.. அதிரடியாக குறைக்கப்பட்ட வீட்டு உபயோக பொருட்களின் வரிகள்.. பிரதமர் சொன்ன தீபாவளி பரிசு!

நாப்கின்கள் மீதான வரி 12 அல்லது 18 சதவிதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
56 வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்..  அதிரடியாக குறைக்கப்பட்ட வீட்டு  உபயோக பொருட்களின் வரிகள்.. பிரதமர் சொன்ன தீபாவளி பரிசு!
Published on
Updated on
2 min read

நேற்று டெல்லியில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்ற 56 வது GST கவுன்சில் கூட்ட தொடரில் ஆகஸ்ட் 15 ஆம் தேதி செங்கோட்டையில் நரேந்திர மோடி கூறியது போலவே GST வரி விதிப்பானது குறைக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் 5,12,18 மற்றும் 28 சதவீதம் என் 4 வகையான வரி விகிதத்தின் கீழ் அனைத்து பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான வரி விதிக்கப்பட்டிருந்தது. இந்த கூட்டத்தொடரில் வீட்டு உபயோக பொருட்கள். உணவு பொருட்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் மீது இருந்த 4 அடுக்கு வரி விதிப்பு, 5 மற்றும் இரண்டு அடுக்காக குறைக்கப்பட்டுள்ளது.

இந்த வரி குறைப்பினால் சிறு வணிகர்கள், வணிகர்கள் மற்றும் சாமானிய மக்கள் எளிதாக பயன் பெரும் வகையில் பொருட்களின் விலைகள் குறையும் என்ற நோக்கத்தில் இந்த சீர்திருத்தங்களை GST கவுன்சில் அங்கீகரித்துள்ளது. அதன் வரி விதிப்பு குறைக்கப்பட்ட பொருட்கள் மற்றும் சேவைகளின் விவரங்களை காண்போம்.

காப்பீடு திட்டங்கள்

தனிநபர் சுகாதார காப்பீடு, குடும்ப மிதவை காப்பீடு, மூத்த குடிமக்கள் காப்பீடு போன்ற காப்பீடு திட்டங்களுக்கு GST விலக்களித்துள்ளது. மேலும் காப்பீட்டை சாமானிய மக்களுக்கு குறைந்த விலையில் வழங்குதல் மற்றும் காப்பீட்டு தொகையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வீட்டு உபயோக பொருட்கள்

எண்ணெய்கள், குளியல் சோப்புகள், ஷாம்புகள், பல் துலக்கும் பேஸ்ட்கள், மற்றும் சமையலறை பொருட்கள் மீதான வரி 18 அல்லது 12 சதவீதத்தில் இருந்து சதவீதமாக குறைக்கப் பட்டுள்ளது. மேலும் ஏர் கண்டிஷனர் இயந்திரங்கள், பாத்திரங்கள் கழுவும் கருவி, டிவி, 350 சிசிக்கு சமமான இயந்திரங்கள் மற்றும் அதற்கு குறைவான மோட்டார் சைக்கிள்கள் ஆகியவற்றின் மீது இருந்த 28 சதவீத வரி 18 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

அத்தியாவசிய பொருட்கள்

உயர் வெப்பநிலை பால், தொகுக்கப்பட்ட அல்லது லேபிளிடப்பட்ட சென்னா மற்றும் பன்னீர் மீது இருந்த 5 சதவீத வரி விலக்களிக்கப்பட்டுள்ளது. நாப்கின்கள் மீதான வரி 12 அல்லது 18 சதவிதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

உணவு பொருட்கள்

இந்திய ரொட்டிகளான சப்பாத்தி மற்றும் பரோட்டாவிற்கு வரி விலக்களிக்கப்பட்டுள்ளது. சாஸ்கள், பாஸ்தா, உடனடி நூடுல்ஸ், பதப்படுத்தப்பட்ட இறைச்சி, வெண்ணெய், சாக்லேட்கள், காபி ஆகிய பொருட்களின் மீதிருந்த 12 அல்லது 18 சதவீத வரி 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

மருந்து பொருட்கள்

புற்றுநோய், அறிய நோய்கள் மற்றும் பிற நோய்களுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தப்படும் 33 உயிர்காக்கும் மருந்துகள் மற்றும் சில மருந்துகள் மீதிருந்த 5 சதவீத வரிக்கு, வரி விலக்களிக்கப்பட்டுள்ளது. மேலும் மற்ற அணைத்து மருந்துகளின் மீதிருந்த 12 சதவீத வரி, 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

சேவை வரி குறைப்பு

ரூபாய் 1000 த்திற்கும் குறைவாக உள்ள அல்லது சமமாக உள்ள ஹோட்டல் தங்குமிடங்கள் மீதான 12 சதவீத வரி 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. ஜிம்கள், சலூன்கள், அழகு நிலையங்கள், யோகா மையங்கள் போன்ற சாமானியர்கள் பயன்படுத்தும் அழகு மற்றும் உடல் நல சேவைகள் மீதான வரி 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com