நெல் கொள்முதல் செய்வதற்கான குறைந்தபட்ச ஆதார விலையை 7 சதவீதம் உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருக்கிறது.
டெல்லியில் மத்திய அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மத்திய உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் செய்தியாளர்களிடம் விவரித்தார். அப்போது விவசாயிகளின் விளைபொருட்களுக்கு லாபகரமான விலையை உறுதிசெய்யும் வகையில் குறைந்த பட்ச ஆதார விலை உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அதன்படி பருப்பு வகைகளுக்கு 10.4 சதவீதமும் நிலக்கடலைக்கு 9 சதவீதமும் குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்த அமைச்சரவை ஒப்புதல் அளித்திருப்பதாக கூறினார். . எள்ளுக்கு 10.3 சதவீதமும் ,நெல், ஜவ்வரிசி, ராகி, சோயாபீன்ஸ் உள்ளிட்டவற்றிற்கு ஆதாரவிலை 7 சதவீதமாகவும் உயர்த்த அமைச்சரவை ஒப்புதல் அளித்திருப்பதாக பியூஷ் கோயல் தெரிவித்தார்.