எருமையோடு செல்ஃபி எடுக்கும் மக்கள்!..

எருமையோடு செல்ஃபி எடுக்கும் மக்கள்!..

மஹாராஷ்டிரா மாநிலத்தில் எருமை மாடு ஒன்று 80 லட்சத்துக்கு ஏலமிடப்பட்டுள்ளது.
Published on

ஷாங்கிலி என்ற மாவட்டத்தில் இருந்து சுமார் ஒன்றரை டன் எடைகொண்ட கஜெந்திரா என்னும் எருமை மாடு ஏலமிடப்பட்டது தொடர்ந்து பொதுமக்கள் என அனைவரும் அதனுடன் செல்ஃபி எடுக்க முற்பட்டு வருவதால் கூட்டம் அலைமோதுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த எருமை மாட்டின் எடையை பராமரித்து வருவதற்காக நான்கு வேலை என அதற்கு கரும்பு,புல் உணவாக கொடுக்கப்படுவதாக அதன் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

இந்த வகையான எருமை மாடுகள் இனப்பெருக்கத்திற்கு உதவும் வகையில் இருப்பதாக கருத்துகள் தொடரும் நிலையில் பல லட்ச ரூபாய் கொடுத்து ஏலம் எடுக்கப்படும் அளவிற்கு இதனை போட்டி போட்டு கொண்டு விவசாயிகள் வாங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இதனை ஏலத்திற்கு விடுவது அரிதான செயலாக கருதப்படுகிறது. ஒரு எருமை மாட்டினை ஏலத்திற்கு கொண்டுவரப்பட்டால் அதனை வாங்க வேண்டும் என்ற நோக்கத்தில் விவசாயிகள் போட்டியிட்டு கொள்வதாக செய்திகள் தற்போது வெளியாகி வருகின்றன.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com