
ஆந்திராவின் கோனசீமா மாவட்டத்தில் ஆழ்துளைக் கிணற்றிலிருந்து தீப்பிழம்புகள் வெளியேறிய காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஆந்திர மாநிலம் சிவகோடு பகுதியில் தோண்டப்பட்டிருந்த ஆழ்துளைக் கிணற்றிலிருந்து தண்ணீரைப் பெறுவதற்கு மின் மோட்டாரை இயக்கிய போது, வாயு கசிவுடன் தீப்பிழம்புகள் பீறிட்டு எழுந்தது.
இது குறித்து அளிக்கப்பட்ட தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ஓ.என்.ஜி.சி. மற்றும் அரசு தீயணைப்பு வீரர்கள், நீண்ட நேரம் போராடி நிலையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இருப்பினும், தண்ணீருக்காக போடப்பட்டு கொண்டிருந்த ஆழ்துளை கிணற்றிலிருந்து தீப்பிழம்புகள் வெளியேறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.