யோகாவில் புதிய வகையான கின்னஸ் சாதனை...

கர்நாடகா மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் 13 லட்சம் பேர் யோகா செய்து புதிய கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளனர்.
யோகாவில் புதிய வகையான கின்னஸ் சாதனை...
Published on
Updated on
1 min read

கர்நாடகா | ஹுப்பள்ளி-தர்வாடில் புதிய சாதனை படைக்கும் வகையில் மாநிலம் தழுவிய மெகா யோகாத்தான் நடத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

இந்த நிலையில் யோகாத்தானை ஆளுநர் தாவர்சந்த் கெலாட் தொடங்கி வைத்தார். தர்வாடில் நடைபெற்ற யோகாத்தானில் சுமார் 23 ஆயிரம் பேர் கலந்து கொண்டு யோகாசனங்களை செய்து அசத்தினர்.

புதிய கின்னஸ் உலக சாதனை புத்தகத்தை உருவாக்கும் முயற்சியில், ஜனவரி 15ஆம் தேதி நடைபெற்ற யோகாத்தான்-23ல் கர்நாடகாவின் 31 மாவட்டங்களில் இருந்து 5 லட்சத்துக்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர்.

26வது தேசிய இளைஞர் விழாவை முன்னிட்டு, 6 இடங்களில் இருந்து 23,923 பேர் யோகா பயிற்சி செய்தனர். தார்வாட் மாவட்டத்தில். ஹூப்ளியின் ரயில்வே கிரிக்கெட் ஸ்டேடியத்தில் 5,000க்கும் மேற்பட்ட நபர்கள் யோகா பயிற்சி செய்தனர்.

முன்னதாக 2018 ஆம் ஆண்டில், ராஜஸ்தான் 1.6 லட்சம் பங்கேற்பாளர்களை ஒரே நேரத்தில் யோகா செய்து கின்னஸ் உலக சாதனை படைத்தது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com