நிர்பந்தம் இல்லை...நம்பிக்கையில் மட்டுமே சீர்திருத்தம் செய்யும் இந்தியா...!

நிர்பந்தம் இல்லை...நம்பிக்கையில் மட்டுமே சீர்திருத்தம் செய்யும் இந்தியா...!
Published on
Updated on
1 min read

நிர்ப்பந்தத்தால் அல்லாமல், நம்பிக்கையின் பேரில், இந்தியா சீர்திருத்தம் மேற்கொண்டு வருவதாக உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.


உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் நடைபெறும் 3 நாட்கள் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். 34 அமர்வுகளாக நடைபெறும் இம்மாநாட்டில் 41 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

இந்நிலையில் விழாவில்  பேசிய பிரதமர் மோடி, மின்சாரத்துறை தொடங்கி அனைத்திலும் உத்தரப்பிரதேசம் முன்னேற்றம் கண்டு வருவதாகவும், உலகளாவிய ஊட்டச்சத்து பாதுகாப்பை நிவர்த்தி செய்ய இந்தியா முயற்சித்து வருவதாகவும் கூறினார்.

பயிர் பல்வகைப்படுத்துதலிலும், விவசாயிகளின் உள்ளீட்டு செலவைக் குறைப்பதிலும், இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கவும் மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக அவர் குறிப்பிட்டார். நிர்ப்பந்தத்தால் அல்லாமல், நம்பிக்கையின் பேரில், இந்தியா சீர்திருத்தங்களை மேற்கொண்டு வருவதாகவும் பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com