விபத்துக்குள்ளானார் நடிகை ரம்பா...!!!விபத்தின் போது உடனிருந்த குழந்தை!!!

விபத்துக்குள்ளானார் நடிகை ரம்பா...!!!விபத்தின் போது உடனிருந்த குழந்தை!!!
Published on: 
Updated on: 
1 min read

நடிகை ரம்பாவின் கார் விபத்துக்குள்ளானது.  சம்பவத்தின் போது  காரில் அவரது குழந்தைகளும் இருந்துள்ளனர். 

இந்த சோகமான செய்தியை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார் நடிகை ரம்பா. இன்ஸ்டாகிராமில் நடிகை பகிர்ந்துள்ள படங்களில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மகளின் படமும் உள்ளது.  அதே போல மற்ற புகைப்படங்கள் கார் விபத்துக்குப் பிறகு மோசமாக சேதமடைந்துள்ளதைக் காட்டுகிறது.

 படங்களைப் பதிவிட்ட நடிகை ரம்பா  ”பள்ளியிலிருந்து குழந்தைகளை அழைத்துச் செல்லச் சென்றேன், நாங்கள் திரும்பி வரும் போது  ஒரு சந்திப்பில் எங்கள் கார் பின்னால் மற்றொரு கார் மோதியது! எனக்கும் குழந்தைக்கும் சிறு காயங்கள் உள்ளன. ஆனால் நாங்கள் பாதுகாப்பாக இருக்கிறோம் என் குட்டி சாஷா இன்னும் மருத்துவமனையில் இருக்கிறாள். மோசமான நாள், மோசமான நேரம். தயவுசெய்து எங்களுக்காக பிரார்த்தனை செய்யுங்கள்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com