ஐயோ… இன்னும் பல மாசம் ஆகுமா!? மர்மமாகிப்போகும் ஏர் இந்தியா விமான விபத்தின் பின்னணி..!

கருப்புப் பெட்டிகளில் ஒன்றின் வெளிப்புற மேற்பரப்பில் சேதம் ஏற்பட்டுள்ளது. விழுந்ததன் விளைவாக இந்த சேதம் ஏற்பட்டது...
air india flight crash
air india flight crash
Published on
Updated on
1 min read

கடந்த 12 ஆம் தேதி அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட ஏர் இந்தியாவின் - 171 போயின் விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் வெடித்து சிதறியது.  இதில் பயணித்த ரமேஷ் என்ற ஒரு நபரை தவிர தரையில் இருந்த 30 பேர் உட்பட 247 -பேர் இதில் கொல்லப்பட்டனர்.

விபத்து நடந்து 2 வாரங்களுக்கு மேலாகியும் இன்னும் இந்த விபத்துக்கான முழு காரணம் கண்டறியப்படவில்லை. ஏனென்றால் விபத்தின் காரணம் குறித்து அறிய உதவும் கருப்பு பேட்டி மோசமாக சேதமடைந்துள்ளது. விமானத்தின் வால் புறத்தில் அமைந்திருக்கும் Black Box என்று சொல்லப்படுகிற கருப்பு பெட்டி விபத்து நடந்து 2 நாட்கள் கழித்து மீட்கப்பட்டது. டிஜிட்டல் விமானத் தரவுப் பதிவுப் பெட்டி (DFDR) மற்றும் காக்பிட் குரல் பதிவுப் பெட்டி (CVR) ஆகிய இரண்டு அம்சங்களும் சேர்ந்ததுதான் கருப்பு பெட்டி.  இந்த கருப்பு பேட்டி தற்போது தற்போது விமான விபத்து புலனாய்வுப் பிரிவின் (AAIB) மேற்பார்வையின் கீழ் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

மீட்கப்பட்ட கருப்புப் பெட்டி பலத்த சேதத்தை சந்தித்துள்ளதால் முறையாக கையால் வேண்டும் இல்லையெனில், தரவுகளை இழக்கும் அபாயம் உண்டு என புலனாய்வு அமைப்புகள் தெரிவிக்கின்றன. இந்த கருப்பு பெட்டியின் தற்போதைய நிலவரம் குறித்து NDTV செய்தி முகமை சில முக்கிய தரவுகளை வெளியிருக்கிறது. 

கருப்பு பெட்டியின் நிலை..!

  1. இரண்டு கருப்பு பெட்டிகள் மீட்கப்பட்டுள்ளன. இரண்டுமே சேதத்தை சந்தித்திருந்தாலும் ஒரு பெட்டி மோசமாக சேதமடைந்துள்ளது.

  2. கறுப்புப் பெட்டிகளை அமெரிக்காவில் உள்ள, National Transportation Safety Board -க்கு அனுப்ப திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

  3. கருப்புப் பெட்டிகளில் ஒன்றின் வெளிப்புற மேற்பரப்பில் சேதம் ஏற்பட்டுள்ளது. விழுந்ததன் விளைவாக இந்த சேதம் ஏற்பட்டது.

  4. டிஜிட்டல் ஃப்ளைட் டேட்டா ரெக்கார்டர் (DFDR) மற்றும் காக்பிட் வாய்ஸ் ரெக்கார்டர் (CVR) இரண்டிலும் உள்ள தரவு பைனரி வடிவத்தில் சேமிக்கப்படுகிறது. இந்தத் தரவு ஒரு பொறியியல் வடிவமாக மாற்றப்பட வேண்டும், அதன் பிறகு தகவல் அணுகக்கூடியதாக மாறும். இதன் அடிப்படையிலே தான் விபத்திற்கான காரணத்தை கண்டறிய முடியும்.

  5. இதுகுறித்து முதற்கட்ட அறிக்கை வெளியிடப்படுமா அல்லது இறுதி அறிக்கை மட்டுமே வெளியிடப்படுமா என்பது தெளிவாகத் தெரியவில்லை.

  6. கருப்புப் பெட்டியின் வெளிப்புற உறை சேதமடைந்து இருப்பதால் அதை திறப்பதில் பல சிக்கல்கள் உள்ளன.

ஒருவேளை விமானத்தின் கருப்பு பெட்டியை National Transportation Safety Board -க்கு அனுப்பினால் அதன் முழு விவரங்கள் தெரிய வர இன்னும் சில காலம் ஆகலாம்…

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com