அமர்நாத் புனித யாத்திரை இந்தாண்டும் ரத்தா?

அமர்நாத் புனித யாத்திரை இந்தாண்டும் ரத்தா?

கொரோனா பரவல் காரணமாக அமர்நாத் புனித யாத்திரை இந்த ஆண்டும் ரத்து செய்யப்படுவதாக காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்கா அறிவித்துள்ளார்.
Published on

கொரோனா பரவல் காரணமாக அமர்நாத் புனித யாத்திரை இந்த ஆண்டும் ரத்து செய்யப்படுவதாக காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்கா அறிவித்துள்ளார்.

இமயமலையில் 3 ஆயிரத்து 880 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள அமர்நாத் குகை கோவில். இங்குள்ள பனி லிங்கத்தை தரிசிப்பதற்காக ஆண்டுதோறும் ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். சுமார் 2 மாதங்கள் நடைபெறும் இந்த புனித யாத்திரையில் நாடு முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பது வழக்கம்.

ஆனால் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு இந்த யாத்திரை ரத்து செய்யப்பட்டது. இந்தநிலையில் கொரோனாவின் 2-வது அலை காரணமாக இந்த ஆண்டும் அமர்நாத் யாத்திரை ரத்துசெய்யப்படுவதாக காஷ்மீர் துணைநிலை ஆளூநர் மனோஜ் சின்கா அறிவித்து உள்ளார். காணொலி வாயிலாக பக்தர்கள் தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com