
பிரதமர், முதலமைச்சர்கள், அமைச்சர்கள் ஆகியோர் குற்ற வழக்குகளில் கைதாகி 30 நாட்கள் சிறையில் இருந்தால், 31 -ஆவது நாள் தானாகவே அவர்கள் பதவி இழக்க செய்யும் மசோதா ‘பதவி பறிப்பு மசோதா’ கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
நாட்டின் பிரதமர் துவங்கி அமைச்சர்கள் வரை இந்த சட்டம் பொருந்தும் என்றாலும், எதிர்க்கட்சி தலைவர்களின் பதவியை பறித்து அவர்களை தன் வயப்படுத்தும் வேலை என காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. மேலும் இது ‘நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கு எதிரானது’ என்றும் எதிர்க்கட்சிகள் விமர்சிக்கின்றன.
ஊழல் வழக்குகளில் சிறை சென்ற அமைச்சர் செந்தில் பாலாஜி, முன்னாள் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் சிறையில் இருந்தாலும் தங்கள் பதவியில் நீடித்தனர். அமலாக்கத்துறையால் குற்றம்சாட்டப்பட்டு கைதாகும் தலைவர்கள் ஜாமீன் பெற நீண்ட காலம் ஆனாலும், அவர்களை பதவி நீக்கம் செய்ய போதுமான சட்டங்கள் இல்லை. ஆனால் இந்த பதவி பறிப்பு மசோதா மூலம், பல தலைவர்கள் பதவி இழக்க வாய்ப்புண்டு.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.