பெட்ரோல் விலை உயருகிறதா...? பிரீமியம் பெட்ரோல் விலையை ரூ.2.35 உயர்த்தியது எண்ணெய் நிறுவனங்கள்!

உலகின் எரிசக்தி விநியோகத்தில் கிட்டத்தட்ட 20% கடந்து செல்லும் ஒரு முக்கிய போக்குவரத்துத் தடைப் பகுதியான ஹார்மோஸ் நீர்சந்தியைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஏற்பட்ட இடையூறுகளே..
பெட்ரோல் விலை உயருகிறதா...? பிரீமியம் பெட்ரோல் விலையை ரூ.2.35 உயர்த்தியது எண்ணெய் நிறுவனங்கள்!
Published on
Updated on
1 min read

ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் நடத்தும் கூட்டு தாக்குதலால் தற்போது பிரீமியம் பெட்ரோல் விலை ரூ.2.35 வரை உயர்த்தியுள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளது.

விலையை லிட்டருக்கு ரூ.2.35 வரை உடனடியாக உயர்த்தியுள்ளன என்று செய்தி வெளியாகியுள்ளது. பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (BPCL) ஸ்பீட், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (HPCL) பவர் எரிபொருள் மற்றும் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் XP90 ஆகியவற்றின் விலைகள் லிட்டருக்கு ரூ.2.09 முதல் ரூ.2.35 வரை அதிகரித்துள்ளன. இருப்பினும், சாதாரண பெட்ரோல்களின் விலையில் எந்த மாற்றமும் இல்லை என்று கூறப்பட்டுள்ளது. தொடர்ந்து நடைபெற்று வரும் ஈரான் மோதல், உலகளாவிய எண்ணெய் விலைகளில் ஒரு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. உலகின் எரிசக்தி விநியோகத்தில் கிட்டத்தட்ட 20% கடந்து செல்லும் ஒரு முக்கிய போக்குவரத்துத் தடைப் பகுதியான ஹார்மோஸ் நீர்சந்தியைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஏற்பட்ட இடையூறுகளே இதற்கு முக்கியக் காரணமாகும்.

பிரீமியம் பெட்ரோல் என்றல் என்ன?

பிரீமியம் பெட்ரோல் என்பது சாதாரண பெட்ரோலை விட அதிக ஆக்டேன் எண்ணைக் கொண்டது. சாதாரண பெட்ரோலுக்கும் பிரீமியம் பெட்ரோலுக்கும் தோற்றத்தில் பெரிய வித்தியாசம் இல்லை. இரண்டையும் வேறுபடுத்திக்காட்டுவது ஆக்டேன் எண் மட்டுமே. மேலும், சாதாரண பெட்ரோலின் ஆக்டேன் எண் 80-85 ஆகும், இது பிரீமியம் பெட்ரோலுடன் ஒப்பிடும்போது மிகவும் குறைவானதாகும். ஆனால், ஆக்டேன் எண் 93-97 அல்லது அதற்கும் அதிகமான வரம்பில் பிரீமியம் பெட்ரோலில் இருக்கும். இந்த பிரீமியம் எரிபொருளில், இன்ஜினில் 'கார்பன் படிவுகள்' ஏற்படாமல் தடுப்பதற்கான சேர்க்கைப் பொருட்களும், சுத்தப்படுத்தும் பொருட்களும் உள்ளன. மேலும், ஆக்டேன் எண் அதிகமாக இருந்தால், இன்ஜினுக்குள் 'நாக்' விளைவுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவாக இருக்கும். ஆக்டேன் மதிப்பீடு அதிகரிப்பதால் எரிபொருள் நுகர்வு குறைகிறது, இது செயல்திறனுக்கும் இயந்திரப் பாதுகாப்பிற்கும் மிகவும் சிறந்தது.

பிரீமியம் பெட்ரோலின் நன்மைகள்:

பிரீமியம் பெட்ரோலைப் பயன்படுத்துவதால் எரிபொருள் சிக்கனம் அதிகரிக்கும் என்று எரிபொருள் நிறுவனங்கள் கூறுகின்றன. சாதாரண பெட்ரோலுடன் ஒப்பிடும்போது, ​​உயர் ஆக்டேன் பெட்ரோல் குறைவான மாசுகளையே வெளியிடுகிறது. பிரீமியம் எரிபொருள் சிறந்த செயல்திறனை வழங்குகிறது, ஆனால் அது இன்ஜினின் வகையையும் சார்ந்துள்ளது.

தற்போது பிரீமியம் பெட்ரோலின் விலையை அதிகப்படுத்தி இருப்பது, வரும் காலங்களில் பெட்ரோல், டீசல் விலையையும் உயர்த்துமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com