”குறைந்தபட்சம் உங்கள் டீயையாவது......” காங்கிரஸ் தலைவர் கார்கே!!!

”குறைந்தபட்சம் உங்கள் டீயையாவது......” காங்கிரஸ் தலைவர் கார்கே!!!
Published on
Updated on
1 min read

பொய்யர்களின் தலைவர், அனுதாபம் பெற ஏழை போல் நடித்து வருகிறார்.  மக்களின் அனுதாபத்தைப் பெறுவதற்காக தன்னை ஏழையாகக் காட்டுவதாகவும், மக்களை அவர் தவறாகப் பயன்படுத்துவதாகவும் குற்றச்சாட்டு.

என்ன செய்யவில்லை காங்கிரஸ்:

குஜராத்தின் நர்மதா மாவட்டத்தில் பழங்குடியினர் அதிகம் வசிக்கும் தேடியாபாடாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, 70 ஆண்டுகளில் காங்கிரஸ் என்ன செய்தது என்று பிரதமர் மோடியும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் கேட்கிறார்களே இது சரியான கேள்விதானா என மக்களிடம் கேள்வியெழுப்பினார்.

அதைத் தொடர்ந்து பேசிய கார்கே நாங்கள் எதுவும் செய்யாமல் இருந்திருந்தால் நாட்டிற்கும் உங்களுக்கும் ஜனநாயகம் கிடைத்திருக்காது என்று கேள்விக்கான பதிலையும் அவரே கூறினார்.

தீண்டாமை:

மேலும் பாஜகவினரை விமர்சிக்கும் விதமாக நீங்கள் உங்களை ஏழை என்று அழைக்கிறீர்கள் எனவும் நானும் ஏழை மற்றும் பிற்படுத்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவன் தான் எனவும் கூறினார் கார்கே.  

தொடர்ந்து பேசிய கார்கே மக்கள் குறைந்தபட்சம் உங்கள் டீயையாவது குடிப்பார்கள் எனவும் ஆனால் அவர்கள் எங்கள் டீயைக் கூட குடிப்பதில்லை எனத் தெரிவித்தார்.

-நப்பசலையார்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com