இந்திய ஒற்றுமை பயணம் 32வது நாள்...!!

இந்திய ஒற்றுமை பயணம் 32வது நாள்...!!
Published on: 
Updated on: 
1 min read

கர்நாடக மாநிலம் தும்கூரில் 32வது நாள் பாரத் ஜோடா யாத்திரையை தொடங்கியுள்ள ராகுல் காந்தி,  மக்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார்.

காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்திடும் நோக்கிலும், பாஜக அரசின் வகுப்புவாத அரசியலுக்கு எதிராக ஒற்றுமையை ஏற்படுத்தவும் கடந்த 7ஆம் தேதி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான ஒற்றுமை யாத்திரையை ராகுல் காந்தி தொடங்கினார்.  

அந்தவகையில் கர்நாடகா மாநிலம் தும்கூரில் முகாமிட்டுள்ள அவர், நடுத்தர மக்கள், விவசாயிகளை சந்தித்து குறைகளை கேட்டறிந்து வருகிறார். தொடர்ந்து தனது 32வது நாள் பயணத்தை  திப்தூர் பகுதியில் இருந்து தொடங்கியுள்ள ராகுல் காந்திக்கு வழிநெடுகிலும் மக்கள் உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com