
போபால் நகரில் புதுசா கட்டப்பட்ட ஒரு ரயில்வே மேம்பாலம் (Rail Over Bridge - ROB) இப்போ சோஷியல் மீடியாவுல பயங்கர வைரலாகி, அதே சமயம் பெரிய சர்ச்சையையும் கிளப்பியிருக்கு.
போபாலில் ஆய்ஷ்பாக் ஸ்டேடியம் பகுதியில கட்டப்பட்ட இந்த ரயில்வே மேம்பாலம், மகாமை கா பாக், புஷ்பா நகர், ரயில் நிலைய பகுதியை புது போபால் உடன் இணைக்கிறதுக்காக 18 கோடி ரூபாய் செலவுல கட்டப்பட்டது. இந்த பாலம் மொத்தம் 648 மீட்டர் நீளமும், 8.5 மீட்டர் அகலமும் உள்ளது. இது சுமார் மூணு லட்சம் பேருக்கு பயன்படுத்துற மாதிரி வடிவமைக்கப்பட்டிருக்கு. ஆனா, இந்த பாலத்தோட 90 டிகிரி திருப்பம், வாகனங்கள் செல்லும்போது விபத்து ஏற்படுத்த வாய்ப்பு இருக்குனு பயத்தை கிளப்பியிருக்கு.
இந்த பாலத்தோட கட்டுமானம் 8 வருஷமா நடந்து, இப்போ முடிஞ்சு திறப்பு விழாவுக்கு தயாராக இருக்கு. ஆனா, இந்த 90 டிகிரி திருப்பம் சோஷியல் மீடியாவுல புகைப்படங்களும், வீடியோக்களும் வைரலானதும், இதை "பேராபத்து நிறைந்த டிசைன்"னு சொல்லி நிறைய பேர் விமர்சனம் செய்ய ஆரம்பிச்சாங்க.
சர்ச்சையோட காரணம்
இந்த பாலத்தோட முக்கிய பிரச்சனை, அதோட 90 டிகிரி திருப்பம். இது ஒரு L வடிவத்துல இருக்கு, இதனால வாகனங்கள் திரும்புறதுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கும். ஒரு உள்ளூர் பொதுமக்கள், பேசும்போது, "இங்க விபத்து நடக்குறது 100% உறுதி. பாலம் நல்லாதான் இருக்கு, ஆனா இந்த திருப்பம் சுத்தமா சரியில்லை. இந்த மாதிரி கூர்மையான திருப்பங்கள் ஆபத்து. இன்னும் கொஞ்சம் இடம் இருந்திருந்தா இதை சரி செய்ய முடியும்,"னு சொல்லியிருக்காங்க.
சோஷியல் மீடியாவுல இந்த பாலத்தோட புகைப்படங்கள் வைரலானதும், நெட்டிசன்கள் இதை "பொறியியல் தோல்வி"னு சொல்லி, மீம்ஸ் உருவாக்கி கிண்டல் பண்ண ஆரம்பிச்சாங்க. இந்த சர்ச்சை வெடிச்சதும், பொதுப்பணித்துறை (PWD) யோட ஏழு பொறியாளர்கள், அதுல இரண்டு முதன்மை பொறியாளர்களும் (Chief Engineers) சஸ்பெண்ட் ஆகியிருக்காங்க. இவங்க பெயர்கள்: சஞ்சய் காண்டே, ஜி.பி. வர்மா, ஜாவேத் ஷகீல், ரவி ஷுக்லா, உமாஷங்கர் மிஸ்ரா, ஷனுல் சக்ஸேனா, ஷபானா ரஜ்ஜாக். இதோட, ஒரு ஓய்வு பெற்ற முதன்மை பொறியாளர் எம்.பி. சிங் மீது துறை ரீதியான விசாரணை ஆரம்பிக்கப்பட்டிருக்கு.
இந்த பாலத்தை டிசைன் பண்ணின M/s புனீத் சத்தா மற்றும் M/s டைனமிக் கன்சல்டன்ட் ஆகிய நிறுவனங்கள் கருப்பு பட்டியலில் (blacklisted) சேர்க்கப்பட்டிருக்கு. இதோட, பாலத்தை சரி செய்ய ஒரு கமிட்டி உருவாக்கப்பட்டு, திருப்பத்தை சுமார் 3 அடி அகலப்படுத்தி, மென்மையான வளைவாக (curve) மாற்ற திட்டமிடப்பட்டிருக்கு. இந்த மாற்றங்கள் எல்லாம் பாலம் திறப்பு விழாவுக்கு முன்னாடி முடிக்கப்படும்.
இந்த 90 டிகிரி திருப்பத்துக்கு முக்கிய காரணமா, கட்டுமானத்துக்கு இடம் கம்மியா இருந்ததும், அருகில் மெட்ரோ ரயில் நிலையம் இருந்ததும் சொல்லப்படுது. இதனால, பொறியாளர்கள் இந்த மாதிரி ஒரு கூர்மையான திருப்பத்தை வடிவமைக்க வேண்டியதாப் போச்சு. ஆனா, இந்த டிசைனை ரயில்வே துறை முன்னாடியே எச்சரிச்சு, "இது பொறியாளர்களுக்கு கெட்ட பெயரை உருவாக்கும்"னு சொல்லியிருக்கு. கடந்த 7 வருஷமா, இந்த டிசைனை மூணு தடவை மாற்றியும், இந்த பிரச்சனை சரியாகல.
அறிவியல் மற்றும் பொறியியல் பார்வை
ரயில்வே மேம்பாலங்கள் வடிவமைக்கும்போது, வாகனங்கள் சுமூகமா செல்லுற மாதிரி மென்மையான வளைவுகள் (curves) இருக்கணும். ஆனா, 90 டிகிரி திருப்பம், வாகனங்களுக்கு திடீர்னு திரும்ப வேண்டிய சூழ்நிலையை உருவாக்குது, இது விபத்து வாய்ப்பை அதிகரிக்குது. பொறியியல் விதிகளின்படி, இந்த மாதிரி கூர்மையான திருப்பங்கள், அதிக வேகத்தில் வரும் வாகனங்களுக்கு ஆபத்து. இதை சரி செய்ய, பாலத்தை 3 அடி அகலப்படுத்தி, மென்மையான வளைவு கொடுக்க திட்டமிடப்பட்டிருக்கு.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.