பீகார் மணிலா சட்டப்பேரவை தேர்தலுக்கான தேதி மற்றும் வாக்கு எண்ணிக்கைகள் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது நவம்பர் 6 ஆம் தேதி மற்றும் 11 ஆம் தேதி வாக்குப்பதிவுகள் நடத்தப்பட்டு 14 தேதி வாக்குகள் எண்ணப்படும் என்ற அறிவிப்பை இந்திய தலைமை தேர்தல் அதிகாரி அறிவித்துள்ளார். இந்த ஆண்டில் பீகாரில் நடைபெறும் தேர்தல் அனைவரிடத்திலும் ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அதற்கு காரணம் கடந்த சில மாதங்களாகவே பீகார் தேர்தல் பற்றிய பல விமர்சனங்களை நாம் பார்த்து வருகிறோம்.
ஏனெனில் பீகாரில் சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தத்தின் படி 47 லட்சம் வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டிருந்தனர். இதனை எதிர்த்து பல்வேறு அரசியல் கட்சிகள் போராடிய நிலையில் குறிப்பாக காங்கிரஸ் கட்சி தலைவர்கள் கடுமையான விமர்சனங்களை மேற்கொண்டு வந்தனர்.ஏறக்குறைய 65 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்கள் நீக்கப்பட்டனர் என தெரிவித்து வந்த நிலையில் மீண்டும் தேர்தல் அணையும் 47 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர் என்ற அதிகாரபூர்வமான அறிவிப்பை வெளியிட்டிருந்தது.
இதனை எதிர்த்து மக்களவை எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சி ராகுல் காந்தி “வாக்காளர் அதிகார யாத்திரை” என்ற பெயரில் பீகார் மாநிலத்தில் 20 நாட்கள் யாத்திரையை மேற்கொண்டிருந்தார். இதில் நமது தமிழ்நாடு முதலமைச்சர் கலந்து கொண்டு தேர்தல் ஆணையத்திற்கு எதிராக தனது கருத்தை தெரிவித்திருந்தார். மேலும் இரண்டு மூன்று முறை செய்தியாளர்களை சந்தித்து வாக்கு திருட்டு நடத்திருப்பதாகவும் தெரிவித்திருந்தார். இந்நிலையில் தற்போது பீகார் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டது இந்திய தேர்தல் களத்தில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
அக்டோபர் 10 தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கி அக்டோபர் 17 வரை நடைபெற்று, அக்டோபர் 18 ஆம் தேதி வேட்புமனு பரிசீலனை செய்யப்பட்டு அக்டோபர் 20 ஆம் தேதி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என்றும் பின்னர் தேர்தல் இரண்டு கட்டங்களாக நவம்பர் 6 மற்றும் நவம்பர் 11 தேதிகள் நடத்தப்பட்டு நவம்பர் 14 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.