

பீகாரில் இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெற்று வாக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில் கருத்து கணிப்பின் முடிவுகள் நிதிஷ் குமார் அங்கம் வகிக்கும் தேசிய ஜனநாயக கூட்டணி சுமார் 140 இடங்களுடன் ஆட்சியமைக்கும் என தெரிவித்தது. ஆனால் மகாபந்தன் கூட்டணியின் முதல்வர் வேட்பாளரான தேஜஸ்வினி யாதவ் “கருத்து கணிப்பு முடிவுகள் எல்லாம் ஒரு உளவியல் அழுத்தம், மாற்றம் உறுதி 18 ஆம் தேதி பதவி ஏற்பு நடைபெறும்” என நம்பிக்கையுடன் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இன்று காலை 8 மணியளவில் வாக்குப்பதிவு எண்ணிக்கை தொடங்கியுள்ளது. முதல் கட்டமாக தபால் ஓட்டுகள் தற்போது எண்ணப்பட்டு வருகிறது.
தபால் வாக்குகள் எண்ணிக்கை
08: 54 AM
தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் 161 தொகுதிகளுக்கான முன்னணி நிலவரங்கள் வெளியாகியுள்ளது. இதில் பாஜக கூட்டணி 89 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது காங்கிரஸ் கூட்டணி 64 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது.
09.02 AM
தற்போது 208 தொகுதிகளின் தபால் வாக்குகளின் எண்ணிக்கை வெளியாகியுள்ள நிலையில் 120 இடங்களில் பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது. 76 தொகுதிகளில் காங்கிரஸ் கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது மற்ற கட்சிகள் 16 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது.
09.41AM
தற்போதைய நிலவரப்படி பாஜக ஜனாதிய கட்சியின் கூட்டணி 155 தொகுதிகளிலும், காங்கிரஸ் கூட்டணி 78 இடங்களில் முன்னணி வகித்து வருகிறார். மின்னணு வாக்குகளின் எண்ணிக்கை முழுமையாக எண்ணப்பட்ட பிறகே முன்னிலை கட்சி என்பது தெரியவரும்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.