₹3,000+ கோடி சொத்து.. ஆனாலும் மக்களிடம் பிச்சை! பாஜக சட்டமன்ற உறுப்பினரின் ஒருநாள் யாசக வாழ்க்கை

பராக் ஷாவின் சொத்து மதிப்பு ₹3000 கோடிக்கும் அதிகமாக சொத்துக்களை உடையவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Maharashtra BJP MLA
Maharashtra BJP MLA
Published on
Updated on
2 min read

மகாராஷ்டிராவின் மிகப் பெரிய பணக்கார சட்டமன்ற உறுப்பினர் ஒரு நாள் மட்டும் பிச்சைக்காரராக வாழ்ந்துள்ளார். பலகோடி ரூபாய்களுக்கு சொந்தக்காரர், பாதுகாப்பு வளையங்களுக்குள் வாழ்ந்த இவர் ஏன் பிச்சைக்காரர் போன்று ஒருநாள் வாழ ஒத்துக்கொண்டார்? என்ற கேள்வி உங்களுக்கு வரலாம் அது குறித்து இதில் காண்போம்.

காட்கோபர் கிழக்குத் தொகுதியின் பாஜக சட்டமன்ற உறுப்பினரான பராக் ஷா, சமூக மற்றும் மத அனுபவத்தின் ஒரு பகுதியாக, பிச்சைக்காரர் வேடமணிந்து வீதிகளில் சென்றுள்ளார். மேலும், விதிகளில், பொது இடங்களுக்கு அவர் தன் அடையாளத்தை மறைத்து சென்றுள்ளார். வீதிகளில் சென்று கொண்டிருந்த மக்களிடம் அவர் உதவி கேட்டுள்ளார். சிலர் உணவு பொருட்கள் வழங்கியும், சிலர் பணமாக கொடுத்ததும் உதவியுள்ளனர். மேலும், சிலர் அவரை கடிந்துள்ளதாக கூறியுள்ளார். ஆனால் அவரது வேடத்தின் காரணமாக மக்களால் அவரை மக்களால் அடையாளம் காண முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், பராக் ஷாவின் சொத்து மதிப்பு ₹3000 கோடிக்கும் அதிகமாக சொத்துக்களை உடையவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், கிடைத்த தகவல்களின்படி, ஜைன சதுர்மாசங்களின் போது, ​​பராக் ஷாவின் குருவான நம்ரமுனி, ஒரு நாள் பிச்சைக்காரனின் வாழ்க்கையையும் சூழ்நிலைகளையும் அனுபவித்து, அவற்றை ஆழமாகப் புரிந்துகொள்ளுமாறு அவருக்கு அறிவுறுத்தியதாக தகவல்கள் கூறுகின்றன. அதனை ஏற்றுக்கொண்ட பராக் ஷா, தனது வழக்கமான பாதுகாப்பு மற்றும் பிற வசதிகளைத் துறந்து, ஒப்பனை அணிந்து ஒரு பிச்சைக்காரனின் தோற்றத்தை மேற்கொண்டார்.

பாஜக எம்.எல்.ஏ. ஷா, தனது செல்வம் மற்றும் அரசியல் பதவி இல்லாத வாழ்க்கை எப்படி இருக்கும்? என்பதை ஒரு நாள் அனுபவித்துப் பார்க்க ஒப்புக்கொண்டு ஒரு பிச்சைக்காரர் வேடத்தில் விதிகளில் உலா வந்துள்ளார். இந்த சமயத்தில், அவர் பல்வேறு இடங்களுக்குச் சென்று, மக்களுடன் உரையாடி, உணவுக்காக யாசித்து வந்துள்ளார். பின்னர், அவரது உண்மையான அடையாளம் வெளிப்பட்ட பிறகு, அவர் மீண்டும் சில இடங்களுக்குச் சென்று, மக்களுடன் உரையாடி, தனது அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டதாக கூறப்படுகிறது.

இந்த விவகாரம் தொடர்பாக, காட்கோபர் கிழக்கு சட்டமன்றத் தொகுதியின் எம்.எல்.ஏ.வான பராக் ஷா, தற்போது விவாதப் பொருளாகியுள்ளார். இருப்பினும், இந்தச் சம்பவம், சமூகத்தின் ஒரு குறிப்பிட்ட பிரிவினரின் வாழ்க்கையையும் சூழ்நிலைகளையும் புரிந்துகொள்ள அவர் மேற்கொண்ட ஒரு தனித்துவமான தனிப்பட்ட மற்றும் மதரீதியான அனுபவமாகவே பார்க்கப்படுவதாக அரசியல் வட்டாரங்களில் கூறப்படுகிறது.

ஒரு சில மணிநேர அல்லது ஒரு நாள் அனுபவத்தின் மூலம் ஒரு நபரது வாழ்க்கையின் உண்மையான சமூக மற்றும் பொருளாதாரச் சூழ்நிலைகளை முழுமையாகப் புரிந்துகொள்ள முடியுமா? என்ற கேள்விகளையும் சிலர் முன்வைத்து வருகின்றனர். மேலும், தமிழ் சினிமாவில் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான பிச்சைக்காரன் திரைப்படத்தை ஒரு நிமிடம் நியாபகம் செய்வதாகவும் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்துவருகின்றனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com