பாஜக இலவசங்களை வழங்கி ஏமாற்றுபவர்கள்..!!

பாஜக இலவசங்களை வழங்கி ஏமாற்றுபவர்கள்..!!
Published on
Updated on
1 min read

பாஜக தலைவர் சி டி ரவி சார்பில் சிக்கமங்களூரு தொகுதியில் வழங்கப்பட்ட இலவச சேலைகளை எரித்து பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

கர்நாடக மாநிலம் சிக்கமங்களூரு தொகுதியின் பாஜக சட்டமன்ற உறுப்பினரும் அக்கட்சியின் மூத்த தலைவராகவும் உள்ள சி டி ரவி சார்பில் அவரது தொகுதியில் உள்ள பொதுமக்களுக்கு இலவசமாக சேலைகள் வழங்கப்பட்டு வருகிறது.  வரும் 22 ஆம் தேதி கன்னடம் புத்தாண்டான உகாதி பண்டிகைக்காக இந்த இலவச சேலைகளை பாஜக சட்டமன்ற உறுப்பினர் சார்பில் வழங்கப்பட்டது.  

இந்நிலையில் பொதுமக்கள் சிலர் கடந்த 5 வருடங்களாக தங்களது நிலையை சட்டமன்ற உறுப்பினர் கண்டுகொள்ளாமல் இருந்து விட்டு தற்பொழுது தேர்தல் சமயத்தில் மட்டும் இலவசங்களை வழங்கி ஏமாற்றுபவர்கள் என்று கூறி தங்களுக்கு வழங்கிய சேலைகளை எரித்து தங்களது எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர்.  பாஜக மூத்த தலைவரின் சட்டமன்ற தொகுதியில் அவருக்கு எதிராக பொதுமக்கள் சேலைகளை எரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com