
சில தினங்களுக்கு முன்னர் ராகுல் காந்தி, “மக்களின் வாக்குகளை தேர்தல் ஆணையம் திருடுகிறது. நாங்கள் இந்த குற்றச்சாட்டை சாதாரணமாக சொல்லவில்லை. 100% ஆதாரம் எங்களிடம் உள்ளது. வாக்குகளை தேர்தல் ஆணையத்தின் மூலம் திருடுவது தேசத்துரோகம். மத்தியபிரதேசம் மக்களவை தேர்தலின்போதே எங்களுக்கு சந்தேகம் இருந்தது. மஹாராஷ்டிரா தேர்தலில் எங்கள் சந்தேகம் உறுதியாகி உள்ளது. 6 மாதம் தனிப்பட்ட முறையில் விசாரணை நடத்தி உள்ளோம். அதில் ஒரு அணுகுண்டு கிடைத்துள்ளது. அது வெடித்தால் தேர்தல் ஆணையம் காணாமல் போய்விடும். பாஜகவுக்கு ஆதரவாக யார் இதில் ஈடுபட்டிருந்தாலும் அவர்களை விடமாட்டோம்” என பேசியிருந்தார்.
நேற்று உண்மையிலேயே அவர் அந்த அணுகுண்டை வெடிக்க செய்திருக்கிறார். நேற்று டெல்லியில் உள்ள தலைமைச்செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி “தேர்தலுக்கு முன்னர் எப்போதும் கள நிலவரங்களை வைத்து கருது கணிப்பு நடைபெரும், அந்த வகையில் “நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக காங்கிரஸ் சார்பில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் 16 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்ற எண்ணிக்கை கிடைத்தது. ஆனால், நாங்கள் 9 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றோம். 7 வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளில் நாங்கள் தோல்வி அடைந்தோம். இந்த தோல்வி குறித்து நாங்கள் ஆய்வு மேற்கொண்டோம்.
இந்த ஆய்வில், தேர்தல் ஆணையம் பாஜகவுடன் கூட்டு வைத்து மக்களின் வாக்குகளை திருடியிருப்பது தெரியவந்தது. 1. போலி வாக்காளர்கள், 2.போலி முகவரி, 3.ஒரே முகவரியில் அதிக வாக்காளர்கள், 4.தவறான புகைப்படங்கள், 5.படிவம் 6. தவறாக பயன்படுத்தப்படுவது என 5 விதமாக வாக்குகள் திருடப்பட்டுள்ளன.
கர்நாடகாவின் பெங்களூரு மத்திய மக்களவைத் தொகுதியில் , 1,00,250 வாக்குகள் திருடப்பட்டுள்ளது. மகாதேவபுரா தொகுதியில் மட்டும் 11,965 போலி வாக்காளர்கள் தவறான மற்றும் முரணான முகவரியை வைத்து சேர்க்கப்பட்டுள்ளனர். 10,452 வாக்காளர்களுக்கு ஒரே முகவரி, பெங்களூரு மத்திய தொகுதியில் உள்ள வாக்காளர் பட்டியலில் 40,009 வாக்காளர்களுக்கு போலியான வீட்டு முகவரி இடம்பெற்றுள்ளது. இதில் சிலருடைய வீட்டு முகவரயின் கதவு எண் ‘பூஜ்ஜியம்’ என்றே இருக்கிறது.
தொடர்ந்து பேசிய ராகுல் காந்தி வாக்குகளை யார் திருடுகிறார் என்பது அம்பலமாகி விட்டது. ஒரு தொகுதியில் மட்டும் 1,00,250 வாக்குகள் திருடப்பட்டிருந்தால் நாடு முழுவதும் எத்தனை ஆயிரம் வாக்குகள் திருடப்பட்டிருக்கிருக்கும் என யோசித்து பாருங்கள். இந்த விவகாரத்தில் நீதித்துறை தலையிட வேண்டும், ஏனெனில் நாம் மிகவும் நேசிக்கும் ஜனநாயகம் தற்போது நாட்டில் இல்லை.
எண்களின் ஆறு மாத கால கடும் ஆய்வின் மூலம், இந்த குற்ற ஆவணங்களை சேகரித்துள்ளோம். அனைத்துத் தரவுகளும் கிடைத்துள்ளன. இந்த வாக்குத் திருட்டு பல தொகுதிகளில் செய்யப்பட்டுள்ளது. எனவே, தேர்தல் ஆணையம் இப்போது சாக்குப்போக்கு சொல்லக் கூடாது. அவர்கள் எங்களுக்கு சிசிடிவி காட்சிகள் மற்றும் மின்னணு வாக்காளர் பட்டியலை வழங்க வேண்டும். இது எனது கோரிக்கை மட்டுமல்ல, அனைத்து எதிர்க்கட்சிகளின் கோரிக்கையும் ஆகும்” என ராகுல் காந்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
இந்த குற்றச்சாட்டு குறித்து தனியார் தொலைக்காட்சி நடத்திய நிகச்சியில் கலந்து கொண்டு பேசிய அரசியல் விமர்சகர் அய்யநாதன் பேசுகையில், “இந்திய ஜனநாயகத்திற்கு ராகுல் காந்தி மிகப்பெரிய பணியை செய்துள்ளார் என்றுதான் சொல்ல வேண்டும், இதனை Fraudulent No.2 என்றே சொல்ல வேண்டும், EVM எந்திரத்தில் முறைகேடு நடந்து வருகிறது என பல காலமாக சொல்லி வருகிறோம். இந்தியா முழுக்க உள்ள பத்திரிகையாளர்களுக்கு 2021 தேர்தலில் என்ன நடந்தது என்று தெரியும். 12 கோடியே 70 லட்சம் வாக்காளர்கள் அவர்கள் புரிதலும் சம்மதமும் இல்லாமல் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளார், அதில் 4 கோடி பேர் முஸ்லீம்கள், 3 கோடி பேர் பட்டியலின மக்கள். இவர்கள் ‘பண்ணா பிரமுக்ஸ்’ என்ற ஒரு அமைப்பை உருவாக்கியுள்ளனர், இவர்கள் யாரென்றால் வாக்காளர் பட்டியல் காப்பாளர் என்று அர்த்தம் இவர்களை வைத்துக்கொண்டு, ஒவ்வொரு வீடாக சென்று தனக்கு வாக்களிக்காத வாக்காளர்களை கண்டறிந்து பட்டியலில் இருந்து நீக்கும் வேலையை திட்டமிட்டு செய்கிறது பாஜக” - என பேசியுள்ளார். வாக்காளர் பட்டியலில் முறைகேடு நடத்தப்பட்டு வாக்குகளை திருடியிருப்பது ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளதால், தேசிய அளவில் பதற்றம் உருவாக்கி உள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.