கூட்டு பாலியல் பலாத்காரத்துக்கு ஆளான சிறுமியின் அடையாளத்தை வெளியிட்ட பாஜக எம்.எல்.ஏ- காங்கிரஸ் கண்டனம்!!

ஐதராபாத்தில், கூட்டு பாலியல் பலாத்காரத்துக்கு ஆளான சிறுமியின் அடையாளத்தை வெளியிட்ட பாஜக எம்.எல்.ஏவை காங்கிரஸ் சரமாரியாக விமர்சித்துள்ளது.
கூட்டு பாலியல் பலாத்காரத்துக்கு ஆளான சிறுமியின் அடையாளத்தை வெளியிட்ட பாஜக எம்.எல்.ஏ- காங்கிரஸ் கண்டனம்!!
Published on
Updated on
1 min read

கடந்த மாதம் பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் வெளியில் சென்று விட்டு திரும்பிய 17 வயது சிறுமி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டார். இதுதொடர்பாக முதல்வர் சந்திரசேகரராவ் கட்சியை சேர்ந்த பிரமுகரின் மகன் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில் சம்பவம் தொடர்பாக சிறுமியின் அடையாளத்துடன் பாஜக எம்.எல்.ஏ ரகுநந்தன் ராவ் டுவிட்டரில் தகவல் பகிர்ந்ததாக கூறப்படுகிறது.

இதற்கு கண்டனம் தெரிவித்து பதில் டுவிட் செய்துள்ள காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாக்கூர், உச்சநீதிமன்ற உத்தரவை மீறி அரசியல் ஆதாயத்திற்காக சிறுமியின் அடையாளத்தை பாஜக வெளியிடப்பட்டுள்ளதாக சாடியுள்ளார். மேலும் தெலங்கானா மகளை, சங்கிகள் விமர்சிப்பதை அனுமதிக்க மாட்டோம் என கூறியுள்ளார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com