”காணாமல் போன” பாஜக எம்.பி...போஸ்டர் ஒட்டிய பொதுமக்கள்!

”காணாமல் போன” பாஜக எம்.பி...போஸ்டர் ஒட்டிய பொதுமக்கள்!
Published on
Updated on
2 min read

பஞ்சாபில் பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் சன்னி டியோலை காணவில்லை என பொது இடங்களில் போஸ்டர் ஒட்டி மக்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர். 

காணவில்லை என்ற போஸ்டரை ஒட்டிய மக்கள்:

கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவை பொதுத் தேர்தலின்போது, நடிகர் சன்னி டியோல் பாஜக சார்பில் குர்தாஸ்பூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிப்பெற்றுள்ளார். ஆனால் அதற்கு பிறகு, குர்தாஸ்பூர் தொகுதிக்கு சன்னி டியோல் வரவே இல்லை. இதனால் அதிருப்தியடைந்த அப்பகுதி மக்கள் சன்னி டியோல் காணவில்லை என்று போஸ்டர்களை சுவர் முழுவதும் ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றனர்.

வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை:

இது குறித்து பொதுமக்கள் கூறும் போது, 2019 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் டியோல் எம்பியான  பிறகு குர்தாஸ்பூருக்கு வரவே இல்லை என்று கூறினார். அதுமட்டுமல்லாமல், 
தேர்தலில் வெற்றிப்பெறுவதற்காக அவர் பல்வேறு வாக்குறுதிகளை அளித்தார். ஆனால் அதை எதையும் அவர் நிறைவேற்றவில்லை.

ராஜினாமாவை சமர்ப்பிக்க வேண்டும்:

தான் ஒரு பாஞ்சாபி மகன் என்று கூறும் டியோல், இதுவரை எந்த தொழில் வளர்ச்சியையும் கொண்டு வரவில்லை என்றும், எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு அவர் எந்த ஒரு மத்திய அரசின் திட்டங்களையும் கொண்டு வரவில்லை எனவும், எம்.பி நிதியை கூட பயன்படுத்தவில்லை எனவும் குமுறியுள்ளனர். அப்படி அவரால் ஜெயித்த தொகுதிக்கு வேலை செய்ய விரும்பவில்லை என்றால், அவர தனது ராஜினாமாவை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அப்பகுதி பொதுமக்கள் கூறினார்கள். 

இந்நிலையில், தேர்தல் வெற்றிக்கு பிறகு டியோல் தொகுதி பக்கம் வராததால் அதிருப்தி அடைந்த மக்கள், அவரை காணவில்லை என வீட்டு சுவர்கள், ரயில் நிலையங்கள், வாகனங்களில் ஒட்டியுள்ளனர். இந்த போஸ்டர்கள் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com