திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 7-ஆம் நாள் பிரம்மோற்சவம்!

Published on

திருப்பதி பிரம்மோற்சவம் சூரிய பிரபை வாகனத்தில் எழுந்தருளிய மலையப்ப சுவாமி 

திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவத்தின் 7-ம் நாளான இன்று காலை உற்சவ மூர்த்தியான மலையப்பர் சூரிய பிரபை வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
 
திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவம் கடந்த  18-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முதல் நாள் இரவு பெரிய சேஷ வாகனத்தில் தொடங்கிய வாகன சேவை, தொடர்ந்து காலை, இரவு என இரு வேளைகளிலும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. 7-ம் நாளான இன்று காலை சூரிய பிரபை வாகனத்தில்  மலையப்பர் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். நான்கு மாட வீதிகளிலும் உலா வந்த சூரிய நாராயணரை திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

வாகன சேவையில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த நடன கலைஞர்கள் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com