
பீகாரில் கனமழையின் காரணமாக மேலும் ஒரு பாலம் இடிந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகாரில் கடந்த இரண்டு வாரங்களில் தொடர்ந்து பல்வேறு இடங்களில் இருந்த பாலங்களும் கட்டப்பட்டு வந்த பாலங்களும் இடிந்து விழுந்தன. இந்த நிகழ்வுகள் பீகார் மாநில அரசுக்கு அழுத்தத்தை ஏற்படுத்திய நிலையில் உயர்மட்டக் குழு விசாரணை நடைபெற்று வருகிறது. இதனிடையே, கயாவில் குல்ஸ்கரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டிருந்த பழமையான பாலம் கனமழையால் சரிந்துள்ளது.