“மகிழ்ச்சியுடன் செல்கிறோம் இந்தியா”- விபத்தில் சிக்கிய வெளிநாட்டவரின் மனதை உலுக்கும் கடைசி பதிவு…!

"மகிழ்ச்சியாக, மகிழ்ச்சியாக, அமைதியாகத் திரும்பிச் செல்கிறோம்”
British passenger, Jamie Ray Meek
British passenger, Jamie Ray Meek
Published on
Updated on
1 min read

குஜராத்திலிருந்து லண்டன் சென்ற Boeing 787-8 ‘Take Off” ஆன சில நிமிடங்களில் வெடித்து சிதறியுள்ளது. விமானம் சர்தார் வல்லபாய் பட்டேல் விமான நிலையத்திலிருந்து பகல் 1.17 -க்கு புறப்பட்டுள்ளது.

1.39 க்கு அனுபவம் பெற்ற மூத்த விமானி சுமித் சபர்வால் ‘May Day Call” செய்தார். கட்டுப்பட்டு அறையை தொடர்புகொண்ட 3 நிமிடங்களிலேயே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. மீண்டும் விமானிகளை கட்டுப்பாட்டு அறையால் தொடர்புகொள்ள முடியவில்லை

இதில் பயணித்த 242 -பேரும்  இந்த விபத்தில் இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. குஜராத்தின் முன்னாள் முதல்வர் விஜய் ரூபாணியும் இந்த விபத்தில் உயிரிழந்துள்ளார்.

இந்த 242 -ல் 169 பேர் இந்தியர்கள், 53 பிரிட்டிஸ்காரர்கள், 7 போர்ச்சுகீசியர்கள், 1 கனடா நாட்டை சேர்ந்தவர் உள்பட விமான ஊழியர்கள் சிலரும் இருந்துள்ளனர்.

மணிக்கு 600 கிலோ மீட்டர் வேகத்தில் சென்ற விமானம் கட்டுப்பாட்டை இழந்து சக்கரங்கள் உள்வாங்கும் முன்னரே வெடித்து சிதறியது.

வெடித்து விழுந்த விமானம் விமான ஓடுதளத்திற்கு அருகே இருந்த மருத்துவர் விடுதி மேல் விழுந்துள்ளது. BJ மருத்துவ கல்லூரி மாணவர்களுக்கான விடுதியின் மேற்கூரை மேல் விழுந்துள்ளது. இதில் கேன்டீன் பகுதி பெருமளவில் சேதமடைந்துள்ளது. இதில் 5 பயிற்சி மருத்துவ மாணவர்கள் பலியாகி உள்ளனர்.

இந்த விமானத்தில் பயணித்த வெளிநாட்டவரான பிரிட்டிஷ் பயணி ஜேமி ரே மீக், அழிந்த ஏர் இந்தியா விமானம் AI171 -இல் ஏறுவதற்கு சற்று முன்பு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டார். பஅவர் அகமதாபாத் விமான நிலையத்தில் சிரித்துக் கொண்டே, இந்தியாவிற்கு விடைபெற்று, தனது பயணத்தைப் பற்றி பேசியுள்ளார்.

"நாங்கள் விமான நிலையத்தில் இருக்கிறோம்,இங்கிருந்து இன்னும் சற்று நேரத்தில் கிளம்ப உள்ளோம்.. இந்தியாவிலிருந்து விடைபெறுகிறேன், லண்டனுக்கு 10 மணி நேர விமானம் திரும்புகிறது," என்று வீடியோவில் அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் கூறுகிறார். தனக்கு அருகில் இருந்த ஒருவரிடம் பேசுகையில், "உங்கள் துணையுடன் பொறுமையை இழக்காமல் இருப்பதுதான் எனது மிகப்பெரிய முடிவு" என்று அவர் மேலும் கூறுகிறார், மேலும் "மகிழ்ச்சியாக, மகிழ்ச்சியாக, அமைதியாகத் திரும்பிச் செல்கிறோம்” எனக்கூறியுள்ளார்.

மகிழ்ச்சியாக தாயகம் திரும்புகிறோம் எனக்கூறிய அந்த நபர் சில மணி நேரங்களிலேயே இந்த கோர விபத்தில் சிக்கி உயிரிழந்திருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com