பாலத்தில் இருந்து விழுந்த பேருந்து – வீடியோ வெளியாகி அதிர்ச்சி  

உத்தர பிரதேச மாநிலம் காசியாபாத்தில் பாலத்தில் இருந்து, பேருந்து கீழே விழுந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பாலத்தில் இருந்து விழுந்த பேருந்து – வீடியோ வெளியாகி அதிர்ச்சி   
Published on
Updated on
1 min read

உத்தர பிரதேச மாநிலம் காசியாபாத்தில் பாலத்தில் இருந்து, பேருந்து கீழே விழுந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நொய்டாவில் இருந்து காசியாபாத்துக்கு 8 பயணிகளுடன் புறப்பட்ட பேருந்து, பாடியா போத் என்ற இடத்தில் சென்றுள்ளது. மேம்பாலத்தில் செல்லும் போது, திடீரென பேருந்தின் டயர் வெடித்தது. இதனால் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, பாலத்தில் இருந்து கீழே விழுந்தது. அப்போது பாலத்திற்கு கீழ் சென்று கொண்டிருந்த இரு சக்கர வாகனம், பேருந்தின் அடியில் சிக்கி கொண்டது.

இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில், படுகாயம் அடைந்த 3 பேர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டுள்ளனர். இதனிடையே சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com