"புதிதாக வாங்கவிருக்கும் பொருட்களை இந்தியத் தயாரிப்பில் வாங்குங்கள்" பிரதமர் கோரிக்கை!!

Published on
Updated on
1 min read

இந்திய கலாசாரத்தை உலகமே கொண்டாடி வருகிறது என மனதின் குரல் நிகழ்வில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

வானொலி நிகழ்ச்சியான மனதின் குரலில் 105வது நிகழ்வில் பிரதமர் மோடி உரையாற்றினார். 

அப்போது சந்திரயான் 3 வெற்றி, ஜி20 உச்சிமாநாடு ஆகியவை இந்தியர்களின் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கியதாக பெருமிதம் தெரிவித்து பேசியுள்ளார். கடந்த சில ஆண்டுகளில் இந்தியா மீதான உலகமக்கள் ஆர்வம் அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

அதே போல், இந்தியாவின் உலகப் பாரம்பரிய சொத்துகளின் எண்ணிக்கை 42ஐ எட்டியதாகவும் அவர் கூறியுள்ளார். இந்தியா பழங்காலத்தில் பயன்படுத்திய பட்டுப்பாதை என்ற வர்த்தக வழித்தடத்தை நினைவுகூர்ந்த பிரதமர் மோடி, சமீபத்தில் ஜி20 உச்சிமாநாட்டில் இந்தியா - மத்திய கிழகு - ஐரோப்பிய ஒன்றிய பொருளாதார வழித்தடத்தை பரிந்துரைத்ததாகக் கூறியுள்ளார். 

மேலும், வரவிருக்கும் விழாக்காலங்களைக் குறிப்பிட்டு, விழாக்களை முன்னிட்டு வீட்டுக்கு புதிதாக வாங்கவிருக்கும் பொருட்களை இந்தியத் தயாரிப்பில் வாங்கிடுமாறும் அவர் வேண்டுகோளும் விடுத்துள்ளார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com