கர்நாடகத்தின் காவிரியில் இருந்து தமிழ்நாட்டிற்கு 2600 அடி நீர் தண்ணீர் திறந்துவிட காவிரி ஒழுங்காற்று பரிந்துரை வழங்கியுள்ளது.
புதுதில்லியில் காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் 89வது ஆலோசனை கூட்டம் குழுத்தலைவர் வினீத் குப்தா தலைமையில் நடைபெற்றது.
தமிழ்நாட்டிற்கு 3000 கன அடி நீர் தண்ணீர் திறந்துவிட காவிரி மேலாண்மை ஆணையம் கொடுத்த உத்தரவு நாளையுடன் முடிவடையவுள்ள நிலையில் அடுத்த கட்ட தண்ணீர் திறப்பு குறித்து 4 மாநில அதிகாரிகள் காணொலி காட்சி வாயிலாக நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றனர்.
தமிழ்நாட்டிற்கு 13000 கன அடி நீர் தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று தமிழ்நாடு அரசு வலியுறுத்தியிருந்தது. இதன்மூலம் தமிழ்நாட்டிற்கு 16.90 டி.எம்.சி தண்ணீர் கிடக்கும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்தது.
இந்த நிலையில் நவம்பர் 1 முதல் 15ம் தேதி வரை அடுத்த 15 நாட்களுக்கு 2600 கன அடி நீர் தண்ணீர் தமிழ்நாட்டிற்கு திறந்துவிட வேண்டும் என்றும் காவிரி ஒழுங்காற்றுக்குழு பரிந்துரை வழங்கியுள்ளது.