தேர்வு அட்டவணையை வெளியிட்ட சிபிஎஸ்இ...!!!

தேர்வு அட்டவணையை வெளியிட்ட சிபிஎஸ்இ...!!!
Published on
Updated on
1 min read

10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான நடைமுறை தேர்வு மற்றும் உள் மதிப்பீட்டு அட்டவணையை வெளியிட்டது சிபிஎஸ்இ.

சிபிஎஸ்இ ஆனது 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான நடைமுறை தேர்வு மற்றும் உள் மதிப்பீட்டு அட்டவணையை வெளியிட்டுள்ளது.   சிபிஎஸ்இ நடைமுறைத் தேர்வுகள் ஜனவரி 2ஆம் தேதி தொடங்கவுள்ளது.  அனைத்துப் பள்ளிகளும் இந்தத் தேர்வுகளை பிப்ரவரி 14-ஆம் தேதிக்குள் நடத்த வேண்டும் எனவும் நடைமுறைத் தேர்வுகளுக்கான வழிகாட்டுதல்களும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தால் வெளியிடப்பட்டுள்ளன. 

சிபிஎஸ்இயின் தேர்வுக் கட்டுப்பாட்டாளர் டாக்டர் சன்யம் பரத்வாஜ் கூறுகையில், நடைமுறைத் தேர்வுகளுக்கான விதிகளின்படி பள்ளிகள் தேர்வுக் கட்டுப்பாட்டாளர் மற்றும் மேற்பார்வையாளர்கள், உதவி மேற்பார்வையாளர்கள் போன்றவர்களை நியமிக்க வேண்டும். எனவும் இதனுடன், நடைமுறைத் தேர்வுகள் நடத்தப்பட்ட பிறகு, அவற்றின் நகல்களை மதிப்பீடு செய்ய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.   மேலும் அவர்களின் மதிப்பெண்களையும் நடத்தும் காலத்தில் பதிவேற்ற வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

-நப்பசலையார்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com