டெல்லி அரசின் பட்ஜெட் தாக்கலுக்கு மத்திய அரசு அனுமதி...!

டெல்லி அரசின் பட்ஜெட் தாக்கலுக்கு மத்திய அரசு அனுமதி...!

Published on

டெல்லி அரசு பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்து உத்தரவிட்டுள்ளது.

டெல்லியில் புதிய மதுபானக் கொள்கை விவகாரம் தொடர்பான வழக்கில், டெல்லியின் துணை முதலமைச்சராக இருந்த மணீஷ் சிசோடியா கைதாகினார். அவரை தொடர்ந்து, முக்கிய அரசியல் புள்ளிகள் அடுத்தடுத்து கைதாகினர்.

இதற்கிடையில் டெல்லி அரசு பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு மத்திய அரசு தடை விதித்தது. ஏனென்றால், புதிய மதுபானக் கொள்கை விவகாரத்தில் கைதான முன்னாள் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா தயாரித்த பட்ஜெட்டை தாக்கல் செய்ய மத்திய அரசு தடை விதித்தது.

இதற்கு  கடும் எதிர்ப்பு தெரிவித்த டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதினார். இந்நிலையில், டெல்லி அரசு பட்ஜெட் தாக்கல் செய்ய ஒப்புதல் அளித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com