தேர்தலில் மதுபானம்.....ஊடுருவலை தடுக்க பெண்கள் அமைத்த செக் போஸ்ட்!!!

தேர்தலில் மதுபானம்.....ஊடுருவலை தடுக்க பெண்கள் அமைத்த செக் போஸ்ட்!!!
Published on
Updated on
1 min read

நாகாலாந்தின் ஃபெக் மாவட்டமானது சாகேசாங் மற்றும் போச்சூரி பழங்குடியினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.  

நாகாலாந்தின் ஃபெக் மாவட்டத்தின் சாகேசாங் பகுதியில் நான்கு தொகுதிகளுடன் ஐந்து சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன.  மேலும் போச்சூரி பழங்குடியினரின் மேலூரி தொகுதியானது சில கிராமங்களையும் கொண்டுள்ளது.

நாகாலாந்தில் பிப்ரவரி 27ஆம் தேதி சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக, ஃபெக் மாவட்டத்தில் உள்ள ஒரு பெண்கள் அமைப்பு, தேர்தல் செயல்பாட்டின் போது வாக்காளர்களுக்கு வழங்கப்படும் மதுபானங்கள் உள்ளே வராமல் தடுக்கும் ஏற்பாடுகளை செய்துள்ளது.  நாகாலாந்தில் ஏற்கனவே மதுபானம் முற்றிலும் தடைசெய்யப்பட்டிருந்தாலும், தேர்தலின் போது அவற்றை ஏனோ தடுக்க முடிவதில்லை.

முற்றிலும் தடை செய்யப்பட்ட மதுவானது தேர்தலின் போது வழங்கப்படுவதால் வாக்காளர்கள் பலர் சண்டைகளில் ஈடுபட்டு கொலையும் செய்யும் சூழல் உருவாவதால் பெண்கள் இந்நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

-நப்பசலையார்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com