இந்தியர்கள் மீதான விசா தடையை நீக்கியது சீனா!!

இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இந்தியர்கள் மீதான விசா தடையை சீனா நீக்கியுள்ளது.
இந்தியர்கள் மீதான விசா தடையை நீக்கியது சீனா!!
Published on
Updated on
1 min read

கொரோனா அதிவேக பரவலை அடுத்து, இந்தியர்கள் சீனாவுக்குள் நுழைய அந்நாடு தடை விதித்து, விசா வழங்காமல் இருந்து வந்தது.

இதனால் அங்கு கல்வி பயின்ற மாணவர்களும் படிப்பை தொடர முடியாத நிலை ஏற்பட்டது. இதனிடையே 2 ஆண்டுகளாக குடும்பத்தை பிரிந்து வாடுவோரும், சீனா தனது முடிவை பரிசீலிக்க அழுத்தம் கொடுக்க வேண்டும் என மத்திய அமைச்சர் ஜெய்சங்கரை வலியுறுத்தினர்.

இந்தநிலையில், விசா கட்டுப்பாடுகளை தளர்த்த முடிவு செய்துள்ள சீன அரசு இந்தியர்கள் விசா கோரி விண்ணப்பிக்கலாம் என கூறியுள்ளது.மேலும் இந்திய மாணவர்களுக்கு விசா வழங்குவது குறித்து அரசு பரிசீலித்து வருவதாகவும், அதேநேரம்  சுற்றுலா மற்றும் தனிப்பட்ட நோக்கங்களுக்கான விசா தடை தொடரும் என கூறப்பட்டுள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com