சாமர்த்தியமாக மின்சாரம் திருட்டு... பொறி வைத்து பிடித்த மின்வாரியம்...

சட்டவிரோத மின் இணைப்பைத் துண்டிக்க தவழ்ந்து வந்த நபரை மின் வாரிய அதிகாரிகள் கையும் களவுமாக பிடித்ததன் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
சாமர்த்தியமாக மின்சாரம் திருட்டு... பொறி வைத்து பிடித்த மின்வாரியம்...
Published on
Updated on
1 min read

உத்திர பிரதேச மாநிலம் காஜியாபாத்தில் ஒரு வீட்டில் சட்டவிரோதமாக மின்சாரம் திருடப்படுவதாக மின் வாரியத்திற்கு புகார் வந்துள்ளது. இதையடுத்து அந்த வீட்டில் மின் திருட்டு நடைபெறுகிறதா என்பது குறித்து சோதனையிடுவதற்காக மின்வாரிய அதிகாரிகள் அங்கு சென்றுள்ளனர். இதனால் அதிர்ந்து போன அவ்வீட்டார் மொட்டை மாடியில் சட்டவிரோத மின் இணைப்பை அதிகாரிகள் கண்டுபிடிப்பதற்கு முன் துண்டித்து விட எண்ணி கையில் கட்டிங் ப்ளேயருடன் தவழ்ந்து சென்றுள்ளார்.

ஆனால் அங்குதான் காத்திருந்தது டுவிஸ்ட். பக்கத்து வீட்டு மொட்டை மாடியில் கையில் கேமராவுடன் காத்திருத்த மின்வாரிய அதிகாரிகள், சட்டவிரோத மின் இணைப்பை துண்டிக்க தகழ்ந்து வரும் நபரை அப்படியே வீடியோவாக பதிவு செய்து அதனை இணையத்திலும் கசிய விட்டனர். இது தற்போது வைரலாகி வருகிறது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com