”வெளியே வந்து அச்சமின்றி வாக்களியுங்கள்....” காங்கிரஸ் தலைவர்!!

”வெளியே வந்து அச்சமின்றி வாக்களியுங்கள்....” காங்கிரஸ் தலைவர்!!
Published on
Updated on
1 min read

அச்சமின்றி வாக்களிக்குமாறு மாநில மக்களை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கேட்டுக் கொண்டுள்ளார்.

திரிபுரா மாநிலத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.  காங்கிரஸ் அதன் கூட்டணி கட்சிகளுடன் இணைந்து போட்டியிடுகிறது.  பாஜக அதிக தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது.  விறுவிறுப்பாக தேர்தல் நடைபெற்று வரும் வேளையில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மக்களுக்கு செய்தி பகிர்ந்துள்ளார்.

"திரிபுரா மக்கள் மாற்றத்திற்காக ஒன்றுபட்டுள்ளனர்.  மக்கள் அனைவரும், குறிப்பாக இளைஞர்கள் அனைவரும் வெளியே வந்து ஜனநாயகத் திருவிழாவில் பங்கேற்று அமைதி மற்றும் முன்னேற்றத்திற்காக வாக்களியுங்கள். அச்சமின்றி வாக்களியுங்கள்" என அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

-நப்பசலையார்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com