
பணவீக்கம் காரணமாக நிதிச் சுமையில் தவித்து வரும் மக்களுக்கு, இன்று முதல் அமலுக்கு வரும் ஜிஎஸ்டி 2.0 வரி விதிப்பு, இந்திய ஆட்டோமொபைல் துறையில் வாகன விலைகளை அதிரடியாகக் குறைத்து சற்று நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த புதிய வரி விதிப்பின்படி, சிறிய ஹேட்ச்பேக் கார்களுக்கு ரூ.40,000 முதல் சொகுசு கார்களுக்கு ரூ.30 லட்சம் வரை விலை குறைகிறது. இதனால், இந்தியாவின் ஆட்டோமொபைல் சந்தையில் இது ஒரு மிகப்பெரிய விலைக் குறைப்பு நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது.
மாருதி சுசுகியின் பட்ஜெட் கார்கள் முதல் ரேஞ்ச் ரோவரின் சொகுசு எஸ்யூவி-க்கள் வரையிலும், ஹோண்டா ஆக்டிவா, ஷைன் போன்ற இருசக்கர வாகனங்கள் வரையிலும், இந்த விலை குறைப்பின் பலன்களை வாடிக்கையாளர்கள் நேரடியாகப் பெற உள்ளனர்.
ஜிஎஸ்டி 2.0-ல் விலை குறையும் கார்கள்
மஹிந்திரா - ரூ.1.56 லட்சம் வரை குறைவு
XUV 3XO: பெட்ரோல் மாடலுக்கு ரூ.1.40 லட்சம், டீசல் மாடலுக்கு ரூ.1.56 லட்சம் வரை குறைவு.
தார் (Thar): ரூ.1.35 லட்சம் வரை விலை குறைகிறது.
ஸ்கார்ப்பியோ என் (Scorpio N): ரூ.1.45 லட்சம் வரை குறைப்பு.
XUV700: ரூ.1.43 லட்சம் வரை குறைப்பு.
டாடா மோட்டார்ஸ் - ரூ.1.55 லட்சம் வரை குறைவு
டியாகோ (Tiago): ரூ.75,000 விலை குறைவு.
நெக்சான் (Nexon): ரூ.1.55 லட்சம் வரை குறைப்பு.
ஹாரியர் (Harrier): ரூ.1.40 லட்சம் வரை குறைப்பு.
சஃபாரி (Safari): ரூ.1.45 லட்சம் வரை குறைப்பு.
டொயோட்டா - ரூ.3.49 லட்சம் வரை குறைவு
ஃபார்ச்சூனர் (Fortuner): ரூ.3.49 லட்சம் வரை விலை குறைகிறது.
லெகெண்டர் (Legender): ரூ.3.34 லட்சம் வரை குறைப்பு.
ஹைலக்ஸ் (Hilux): ரூ.2.52 லட்சம் வரை குறைப்பு.
இன்னோவா கிரிஸ்டா (Innova Crysta): ரூ.1.80 லட்சம் வரை குறைப்பு.
ரேஞ்ச் ரோவர் - ரூ.30.4 லட்சம் வரை குறைவு
ரேஞ்ச் ரோவர் 4.4P SV LWB: ரூ.30.4 லட்சம் வரை விலை குறைப்பு.
டிஃபெண்டர் (Defender): ரூ.18.6 லட்சம் வரை குறைப்பு.
கியா - ரூ.4.48 லட்சம் வரை குறைவு
சொனெட் (Sonet): ரூ.1.64 லட்சம் வரை குறைவு.
கார்னிவல் (Carnival): ரூ.4.48 லட்சம் வரை குறைப்பு.
ஸ்கோடா - ரூ.5.8 லட்சம் வரை பயன்கள்
கோடியாக் (Kodiaq): ஜிஎஸ்டி குறைப்பால் ரூ.3.3 லட்சம் மற்றும் பண்டிகை கால சலுகையாக ரூ.2.5 லட்சம் உட்பட ரூ.5.8 லட்சம் வரை பலன்கள்.
ஹூண்டாய் - ரூ.2.4 லட்சம் வரை குறைவு
வெர்னா (Verna): ரூ.60,640 குறைவு.
கிரெட்டா (Creta): ரூ.72,145 குறைப்பு.
டக்ஸான் (Tucson): ரூ.2.4 லட்சம் வரை குறைப்பு.
மாருதி சுசுகி - ரூ.2.25 லட்சம் வரை குறைவு
ஆல்டோ K10: ரூ.40,000 குறைவு.
ஸ்விஃப்ட் (Swift): ரூ.58,000 குறைப்பு.
பிரெஸ்ஸா (Brezza): ரூ.78,000 குறைவு.
இன்விக்டோ (Invicto): ரூ.2.25 லட்சம் வரை குறைப்பு.
நிசான் - ரூ.1 லட்சம் வரை குறைவு
மேக்னைட் CVT டெக்னா+: ரூ.1,00,400 வரை குறைப்பு.
ஹோண்டா - ரூ.95,500 வரை குறைவு
ஹோண்டா எலிவேட்: ரூ.58,400 வரை குறைப்பு.
ஹோண்டா அமேஸ்: ரூ.95,500 வரை குறைவு.
ஜிஎஸ்டி 2.0-ல் விலை குறையும் இருசக்கர வாகனங்கள்
இந்தியாவில் விற்பனையாகும் 98% இருசக்கர வாகனங்கள் 350சிசி-க்கு குறைவாகவே உள்ளன. இந்த வாகனங்களுக்கான ஜிஎஸ்டி வரி 28%-ல் இருந்து 18% ஆகக் குறைக்கப்பட்டிருப்பது, வாடிக்கையாளர்களுக்கு மிகப் பெரிய உதவியாக உள்ளது.
ஹோண்டா ஆக்டிவா, ஹீரோ ஸ்ப்ளெண்டர், பஜாஜ் பல்சர், டிவிஎஸ் அப்பாச்சி, ராயல் என்பீல்டு கிளாசிக் 350 போன்ற பிரபலமான மாடல்களின் விலை கணிசமாகக் குறைவதால், புதிதாக கார் வாங்குபவர்களின் எண்னிக்கை அதிகரிக்கும் என்றும், பண்டிகைக் கால விற்பனை சூடுபிடிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஹோண்டா இருசக்கர வாகனங்கள் - ரூ.18,887 வரை குறைவு
ஆக்டிவா 110: ரூ.7,874 குறைவு
ஆக்டிவா 125: ரூ.8,259 குறைவு
ஷைன் 100: ரூ.5,672 குறைவு
சிபி350 (CB350): ரூ.18,887 வரை குறைப்பு.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.