முதலமைச்சர் மற்றும் பிரதமர் மறைந்த முலாயம் சிங் யாதவிற்கு இரங்கல்...

முலாயம் சிங்க் யாதவிற்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
முதலமைச்சர் மற்றும் பிரதமர் மறைந்த முலாயம் சிங் யாதவிற்கு இரங்கல்...
Published on
Updated on
1 min read

இந்தியாவின் தவிர்க்க முடியாத தலைவர்களில் ஒருவராக இருந்த சமாஜ் வாடி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ், இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

1996 முதல் 1998-ம் ஆண்டு வரை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்த முலாயம் சிங், உத்திரபிரதேச சட்டமன்றத்திற்கு 7 முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர். மேலும், பல்வேறு கட்சிகளுடன் கூட்டணி வைத்துக் கொண்ட முலாயம் சிங் யாதவ் வயது மூப்பால் கடந்த ஆகஸ்ட் மாதம் 22-ம் தேதி குருகிராமில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில், இன்று காலை அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அவரது மகன் அகிலேஷ் யாதவ் உறுதி செய்த்ததி அடுத்து இந்தியா முழுவதும் இது பெரும் சோகத்தைக் கொடுத்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, இந்திய பிரதமர் நரேந்திர மோடி, தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளார். மூன்று ட்வீட்டுகளாக பதிவிட்டிருக்கிறார்.

இவரைத் தொடர்ந்து, தமிழ்நாட்டு முதலமைச்சர் மற்றும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது இரங்கல்களை தெரிவித்துள்ளார். அதில், “இட ஒர்துக்கீடுக்காக முன்னின்ற தலைவர்களில் உயர்ந்து நின்ற மனிதர் இவர். அவரது மறைவு எனக்கு கவலை தருகிறது. என் உடன்பிரவா சகோதரர் மற்றும் சமாஜ் வாடி கட்சியின் தலைவரான முலாயம் சிங் யாதவ் மறைவுக்கு அவரது மகன் அகிலேஷ் யாதவ் மற்றும் அவரது குடும்பத்திற்கு இரங்கல் தெரிவிக்கிறேன்” என பதிவிட்டிருந்தார்.

மேலும், அவரதி இறுதி தருணங்களில் திமுக சார்பில் கட்சியின் பொருளாளரும், திமுக நாடாளுமன்றக் கட்சித் தலைவருமான திரு.டி.ஆர்.பாலு அஞ்சலி செலுத்துவதாகவும் தெரிவித்திருந்தார்.

இவர், 1989-1921, 1993-1995, 2003-2007-ம் ஆண்டு காலகட்டத்தில் 3 முறை முதலமைச்சராக இருந்தவர். இவரை தொடர்ந்து இவரது மகனான அகிலேஷ் யாதவ்வும் அரசியலில் கால் பதித்து பிற்காலத்தில் முதலமைச்சராகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com